பக்கம்:பிறந்த மண்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி - - 93

‘அழகியநம்பி கடிதம் எழுதியிருந்தாலும் எழுதியிருப் பான். அவனைத் தவிர வேறு யாரிடமிருந்து இப்போது நமக்குக் கடிதம் வந்திருக்கப் போகிறது?-நினைத்துக் கொண்டே ஆசையோடு நின்றாள். மனம் வேகமாக அடித்துக் கொண்டது. தபால்காரன் எதிர் சிறகிலிருந்த வீட்டில் கடிதம் கொடுத்துவிட்டுத் திரும்பிவந்து கொண் டிருந்தான். எதிர்பார்த்தது வீண்போகவில்லை. தபால் காரன் “முத்தம்மாள்.அண்ணி” என்று பெயரை இரைந்து வாசித்தான். இரண்டு கடிதங்களைத் திண்ணையில் வீசி எறிந்துவிட்டுப் போனான். குடும்பப் பாங்கிலும் அடக்க ஒடுக்கப் பண்புகளிலும் பழைமையான கட்டுப்பாடுகளிலும் தழும்பேறிப் போ யிருந்த அந்த அம்மாளுக்குத் தபால்காரன் நட்ட நடுத்தெருவில் நின்றுகொண்டு தன் பெயரை அப்படி இரைந்து கூவிக் கடிதங்களை வ் 總 எறிந்தது என்னவோ போலிருந்தது. ஒரு கணம் சிறிய் நுணுக்கமான கூச்சம் ஒன்று அந்த அம்மாளைப் பற்றிக் கொண்டது. -

ஒரு கையில் செம்பையும், டம்ளரையும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையில் கடிதங்களோடு உள்ள்ே வந்தாள். “ஏ வள்ளியம்மை! இந் தா, கடிதாசி வந்திருக் கிறது பார். யார் எழுதியிருக்கிறார்களென்று படித்துச் சொல்லேன்.” - -

கடிதாசி என்ற சொல்லைக் கேட்டவுடன் அடுப்படி யில் உட்கார்ந்திருந்த வள்ளியம்மை மிட்டாய்ப் பொட்ட லத்தைப் பார்த்து ஓடிவ்ரும் சிறு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்து ஓடிவந்த்ாள். தாயின் கையிலிருந்து கடிதங்களை வாங்கிப் பார்த்தாள். -

அம்மா ஒரு கடிதாசி அண்ணன் கொழும்பிலிருந்து போட்டிருக்கிறது. இன்னொன்று தென்காசியிலிருந்து அண்ணனுடைய சிநேகிதர் ஒருத்தர் எழுதியிருக்கிறார். முருகேசன் என்று பெயர். அண்ணன் புறப்பட்டுக் கொழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/95&oldid=596794" இலிருந்து மீள்விக்கப்பட்டது