பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராசேந்திர சோழன் 255 யாக இருந்தது என்பது இவன் காலத்துக் கல்வெட்டுக் களால் புலனாகின்றது. ' திருமடந்தையும் சயமடந்தை யும் திருப்புயங்களில் இனிதிருப்ப '1 எனவும், ' திங்க ளேர் மலர்ந்து வெண்குடை மண்டிலம் '2 எனவும் தொடங்கும் இவன் மெய்க் கீர்த்திகள் இரண்டும் இவ் வாறே இவ்வேந்தனை ' வீரமுந் தியாகமும் ஆரமெனப் புனைந்து மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர் ' என்று கூறுகின்றமையால் இவன் மக்களால் பெரிதும் போற்றப் பட்டுப் பெரும் புகழுடன் வாழ்ந்து வந்தனனாதல் வேண் டும். இவன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, வடஆர்க்காடு தென்னார்க்காடு, தஞ்சாவூர் ஆகிய ஜில்லாக்களிலும் ஈழ மண்டலத்திலும் காணப்படுகின்றன. இவனது ஆட்சி யின் மூன்றாம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுள் ஒருவ னும் படைத்தலைவன் ஒருவனும் காஞ்சிபுரத்தில் திருமயா னமுடையார் கோயிலிலுள்ள கங்கைகொண்டான் மண்ட பத்திலிருந்து, திருவல்லம், திருக்காரைக்காடு முதலான ஊர்களிலுள்ள கோயில்களின் கணக்குகளை ஆராய்ந்து அக்கோயில்களுக்குச் சில புதிய நிவந்தங்கள் அளித்தமை அவ்வூர்களிலுள்ள கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின் றது.' இவ்வேந்தன், கி. பி. 1070-ஆம் ஆண்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் தன் அரண்மனையில் இருந்து கொண்டு, தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய திருப்பாசூர்க் கோயிலுக்குரிய தேவதானமாகிய சேலை என்னும் ஊரை இறையிலியாக்கிய செய்தி அக்கோயி லில் வரையப் பெற்றுள்ளது. அதில் இம் மன்னனுடைய உடன் கூட்டத்ததிகாரிகளும் மற்ற அரசியல் தலைவர்க ளும் கையழுத்திட்டுள்ளனர். இவற்றையும் இவை 1. S. I. I., Vol. VII, Nos, 884 and 442 2. Ibid, Vol, IV, Nos, 1388 and 1392 3. Ibid, Vol. III, No. 57. Ibid, Vol. VIII, No. 4. 4. Ins. 113 of 1930