பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பிற்காலச் சோழர் சரித்திரம் னர். அவர்கள் கருத்தையும் ஆராய்ந்து உண்மை காண்பது இன்றியமையாததாகும். நம் அதிராசேந்திரன் தன் முன்னோர்களைப்போல வைணவ சமயத்தில் சிறிதும் வெறுப்பின்றி அதன்பால் ஆதரவுகாட்டிச் சமயப் பொறையுடன் ஒழுகியவன் என் பதற்கும் சித்திரகூடத் திருமாலைக் கடலில் கிடத்தியவன் விக்கிரமசோழன் மகனாகிய இரண்டாங் குலோத்துங்க சோழனே என்பதற்கும் பல சான்றுகள் கல்வெட்டுக்களி லும் தமிழ் நூல்களிலும் உள்ளன. அவையெல்லாம் இரண்டாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும். தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருவக்கரை சந்திர மௌளீசுவரர் சிவாலயத்திற்குள் இருந்த வரதராசப் பெரு மாள் கோயில் அதிராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கருங்கற் கோயிலாகக் கட்டப்பெற்றது என்பது அவ் வூரில் காணப்படும் கல்வெட்டொன்றால்3 இனிது புலப் படுகின்றது. இச்செய்தியொன்றே இவன் வைணவ சமயத்தை வெறுக்காமையோடு அதற்கு ஆதரவும் அளித் துச் சமயப்பொறையுடன் ஒழுகிவந்தான் என்பதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகுமன்றோ? எனவே, எல் லாச் சமயங்களிடத்தும் பொதுநோக்குடையவனாய் வாழ்ந்து வந்த இப்பெருங்குண வேந்தன் வைணவர்கட்கும் திரு மால் கோயிலுக்கும் தீங்கிழைத்தான் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. அன்றியும் வைணவ நூல் களில் குறிப்பிடப்பெற்றுள்ள இராமா நுசர், அதிராசேந் திர சோழனுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்டவர் ஆவர். ஆதலால், இவ்வேந்தன் காலத்தில் அந்நிகழ்ச்சிகள் 1. The Colas, Vol. I, page 354. 2. இராசராசசோழன் உலா, வரிகள் 65-66 ; தக்கயாகப் பரணி, பாடல் 777, 3. Ins. 205 of 1904.