10. பிள்ளைக்கலி பூவை எஸ். ஆறுமுகம் முதல் பிரம்மா பெருமூச்செறிந்தார். முதற்பூ மடலவிழ்ந்தது. முதல் குரல் புறப்பட்டது. குழந்தை அழுதது; அழுதது; அப்படி அழுதது. அபாயங்களைத் தன்னுள் அடக்கிக் கிடந்த காடு. கூப்பிடு தொலைவில் ஒரு காட்டாறு. கருக்கல் பொழுது. புல்தரை; பிறந்த மேனியாய்க் கிடந்தது பச்சைமண். பச்சை ரத்தம் மேனியை வெட்டிப் பாய்ந்தோடத் துடித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் உடல் துடிதுடித்தது. நஞ்சுக் கொடி துவண்டு கிடந்தது. ரத்தத் துளிகள் பல கோடுகளில், பல கோணங்களில் சிந்திக் கிடந்தன. பன்னிர்த் துளிகள் அந்தக் குருதிப் புனலில் இரண்டறக் கலந்தன. புள்ளிமான்கள் ஓடிவந்தன. வண்ணப் பறவைகள் நாடி வந்தன. வாயில்லாப் பிராணிகள் வாய்விட்டுப் புலம்பின. அந்தக் குழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. குழந்தைத் தெய்வம் அழுதது; அழுது கொண்டேயிருந்தது. 'மன்றுளே மாறியாடு மறைச் சிலம்படிகள் நடுங்கின: வென்றுள்ே புலன் களைந்தார் மெய்யுணருள்ளந் தோறுஞ் சென்றுளே அமுதமூற்றுந் திருவருள் திகைத்தது: சிவன் சிந்தித் தார். “கவுணியர்க்குப் பால் சுரந்த சக்தி' தடுமாறினுள்; பங்கயற் கணரிய பரம் பரனுருவே தனக்குரிய படிவமாகி, எண்ணிறத்த சராசரங்களின்ற கயற்கண் மலர்க் கூந்தற்குமரி பாண்டியன் மகள் செயலிழந்தாள். சிவசக்தி சிந்தித்தாள். ‘'தேவி, பூலோகம் வரவர உருப்படாமல் போய்க்கொண் டிருக்கிறது! பார்த்தாயா. அந்தப் பச்ச்ைமண்ண? கேட்டாயா, அதன் தினக்குரலே குவா, குவா என்று கதறி அழும் அதன் வேதனையிலே, தெய்வமே, தெய்வமே என்ற எதிரொ :
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/101
Appearance