உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈G套 கிறதே! பாவம்'..... 'படைப்பு புதிர்’ என்று சொல்லுகிரு.ர்கள், மண்ணிலே. ஆனல், அவர்களே படைப்பைப் புதிராக்கி, அத்துடன் வாழ்க்கையையும் புதிராக்கிக் கொண்டு விடுகிரு.ர்கள். அது மட்டுமா ? நீயும் நானும் கூடத்தான் அந்தப் புதிர்ப் பிணைப்பில் இணைக்கப்பட்டுப் பேசப்படுகின்ருேம். விந்தைமிகு மக்கள்-மக்களா? மாக்கள். . . . ! ? பிறை சூடியின் குரலில் எரிமலை கனன்றது. 'அன்பரே, உங்கள் வாய்மொழி முற்றும் உண்மை. கடந்த பத்து நாழிப் பொழுதாக நான் உறக்கம் கொள்ளவில்லை. முதற் குரல் எதிரொலித்தது; திடுக்கிட்டு விழித்தேன். சிசுவின் வினைப் பயன் அப்படியோ? பாவம், பிறந்த குழந்தை பிறந்த மண்ணில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோ, பொழுது புலர்ந்து விட்டது. காட்டுவழி நடப்பவர்கள் ஓடோடி வருகிருர்கள்: குழந்தையைப் பார்க்கிருர்களே! ஆ என்ன கொடுமை? ஐயோ! அவர்கள் எல்லோரும் போய்விட்டார்களே, மதலையை மறந்து...! ஒரு சொட்டுக் கண்ணிருக்குக்கூடப் பஞ்சமாகி விட்டதே ? சே, பாழ் உலகம்! இதயமிழந்த பாவிகள்!' இமயவல்லியின் இமை பாவா விழிகளிலே கோபம் கொந் தளித்தது. 'உமையவளே! சினம் தவிர். பூலோகம் விசித்திரமானது! அது நம் இருவருக்கும் புரியாததல்லவே? குழந்தையைக் கண்டவர் கள் வறிதே சென்ருர்களல்லவா ? அப்போது, அவர்கள் உதடுகள் உதிர்த்த தீர்ப்பை மறுமுறையும் நினைத்துப் பார்; ம்... யார் பெற்ற குழந்தையோ? நமக்கு எதற்கு இந்த வம்பு எல்லாம் இதன் தலைவிதிப்படிதானே நடக்கும்?' என்று சொல்லிப் பயந் தோடி விட்டார்களே! அர்த்தமற்ற, நெஞ்சற்ற வார்த்தைகளின் அநியாயத்தைப் பார்த்தாயா?" என்று கேள்விக் குறியை எழுப்பினர் மங்கைபாகன். 'ஆ நெஞ்சு வெடிக்கக் கதறுகிறதே? பிறந்தது முதல் குமுறிக் குமுறி அழுகிறதே?... தேவா, குழந்தையின் முடிவு என்னுவது?" என்று கவலையுடன் வினவினுள் மாதா. "பெற்றவளே குழந்தையைப்பற்றித் துளிக்கூட அக்கறைப் படாதபோது, நீ ஏன் கவலைப்பட வேண்டும், சங்கரி?' என்று வினயமாகக் கேட்டார் சுடலையாடி. மறுபடியும் என்னைப் பரீட்சை செய்ய ஆரம்பித்து விடா தீர்கள். பிரபோ இந்தக் குழந்தைப் பிரச்ன்யை முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/102&oldid=1395721" இலிருந்து மீள்விக்கப்பட்டது