பக்கம்:பிள்ளைக்கலி.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 உதயம். தெய்வச் சந்நிதியில் தெய்வ கானம்: சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி, அருஉருவத் தன்மை, நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவறநின் றியக்கஞ் செய்யும் சோதியைமாத் துTவொளியை மனதவிழ நிறைவான தூய வாழ்வைத் தீதில்பர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வோம்!' தெய்வக் குழந்தையின் அழுகையொலி வரவரத் தேய்ந்து கொண்டிருந்தது. இதயமுள்ள யாரோ ஒரு செம்படவன் வந்தான், குழந் தையைப் பார்த்தான்; அவனுடைய கண்ணிர்த் துளிகள் பேசும் பொற்சித்திரத்தைக் குளிப்பாட்டின. 'குழந்தை, மேலுல கத்துப் பாரிஜாதப்பூ! ஆண்டவனே, உன் மகிமையே மகிமை! எங்கள் பிள்ளைக்கலி தீர்ந்து விட்டது!' என்று ஆனந்தக் குரலைத் திக்கெட்டும் திசை பிரித்துவிட்ட வண்ணம், சேயும் கையுமாகப் பறந்தான். 岑 岑 岑 முக்கண்ணி சிரித்தாள்! முக்கண்ணன் சிரித்தான்! பாரிஜாதம் சிரித்தது! இருட்டு-மைஇருட்டு. வண்ணக்களஞ்சியத்தை வாரியணைத்துக் கொஞ்சி மகிழ்ந்த வாறு வாசலில் அமர்ந்திருந்தான் அந்தச் செம்படவன். மெய்ம் மறந்திருந்தாள் அவனுடைய மனையாட்டி. "அண்ணே, அண்ணே! ஒடியா, ஒடியா! பாவம், யாரோ ஒரு பொம்பளை காட்டாத்திலே விழுந்திட்டா. நாங்க படகிலே காப்பாத்திைேம். பொளைக்கிருளோ, என்னமோ, சங்கிலிக் கருப்பனுக்குத்தான் தெரியும்!” 'அந்தப்பெண் மெல்ல மெல்லக் கண் திறந்தாள். கண்ணிர் வெள்ளம் புரண்டோடியது. அவள் கதறிள்ை: 'கடவுளே! நான் செஞ்ச குற்றத்துக்கா என் குழந்தையை என்கிட்டேயிருந்து ತತಿ? என்ன ஆசைகாட்டிமோசஞ் செஞ்சவனக் கொன்னுப் பிட்டு என் குழந்தைக்காக ஓடோடி வந்தேனே. பெற்ற