உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 魔五鲁

  "சிற்பச்செல்வமே! என் சிந்தையெல்லாம் இனித்துவிட்டது. காளையார் கோயிலின் கோபுரத்தை உருவாக்கியபோது கண்ட மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சியடைகிறேன். ரதம் முடிவடைந் ததும், தாங்கள் எதைப் பரிசாகக் கேட்டாலும் தருவதற்குத் தயங்க மாட்டேன்."
  பெரிய மருதுவின் அகன்ற கண்களில் மகிழ்ச்சி கரை புரண்டது.
  நாளும் கோளும் பார்த்து, ரதத்தை உருவாக்கத் தொடங்கினர் குப்பமுத்தாசாரி. அவரிடம் நீண்ட நாளாய் ஓய்விலிருந்த கற்பனை, ஒன்றுகூடித் திரண்டது.
  ரதத்தின் சப்பர அளவை எடுத்து நடுப்பாகத்தை அளந்தார் குப்பமுத்தாசாரி. அந்த நடுப்பாகத்தில் சுண்ணக் கட்டியால் வலம்புரி வினாயகரை வரைந்தார்; வணங்கினார். அடுத்து உளியைக் கையிலெடுத்து நெற்றிக்கு நேரே நிறுத்திக் கொட்டாப்புளியால் ஊன்றினார். அரை நாழிகைப் பொழுதில் வினாயகருடைய முகம் மிக அழகிய முறையில் அமைந்தது. துதிக்கையைச் சற்றே நீட்டி வளைக்க வேண்டி உளியைச் சாய்த்துச் செதுக்கினர்.
  ஆ.........! கடக்'
  துதிக்கை சிதறியோடி அப்பால் விழுந்தது; அகன்ற ஆசாரியின் கண்கள் நடந்ததறிந்து நடுநடுங்கின. இடக்கையிலிருந்த உளியும், வலக்கரம் பற்றியிருந்த கொட்டாப்புளியும் நழுவிக் கீழே விழுந்து மெல்ல ஒசையெழுப்பின.
  நாடி, நரம்பு தளர்ந்து எழுந்தார் ஆசாரி. சோதிட நாடி பார்க்க அவருடைய நெஞ்சம் நாடியது.
  நேரத்தைக் கவனித்தார் - கணித்தார்.
  ஒரு பூவின் நினைவு அவருக்குத் தோன்றியது. கணக்குப் போட்டுப் பெருக்கிக் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ஒரு எண் மிகுதியாகக் கிடைத்தது. அதன்படி ஒலைச்சுவடியை விரித்துப் பார்ததார்.
  கேளப்பா........' என்று தொடங்கிய வரிகளைக் குறைந்தது பத்துத் தடவையேனும் படித்துப் பார்த்திருப்பார். அப்போதும் ஐயம் நீங்கியபாடில்லை. 
  சோதிடம் கூறிய அந்த உண்மை அவருடைய நெஞ்சத்தை ஓர் உலுக்கு உலுக்கியது. செயல்களுக்கெல்லாம் எலும்பில் காய்ச்சல் ஏற்பட்டது. சிந்தித்தார்; மேலும் மேலும் சிந்தித்தார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/108&oldid=1395886" இலிருந்து மீள்விக்கப்பட்டது