Ꭵ Ꮋ Ꭵ சிந்தனை ஒருவாறு முடிவைக் கண்டது. எப்படியும் ரதத்தை உருவாக்கியே தீர வேண்டும். கொடுத்த வாக்கை இதுவரை அவரது மரபினர் மீறியதே கிடையாது. மேலும் நாடி’ சொன்ன செய்தியை அரசரிடம்கூறுவதும் தகாத ஒன்று. அப்படிக் கூறிலுைம் நம்புவோர்போக, நம்பாதவர்கள், செயல்பட ஒப்புக் கொள்ளாமைக்காகச் செப்படி வித்தை செய்கிருன் இந்தச் சிற்ப ஆசாரி என்று ஊர்றிய ஒலமிடுவார்கள். ஆகவே ரதத்தை உருவாக்கியே தீர வேண்டும்...... கலே வாழட்டும்! காளையார் கோயிலில் ரதம் மிகமிக அற்புதமான முைறயில் உருவானது. மருத மரத்தின் மஞ்சள் நிறம், தங்கத்தால் ஆக்கப் பட்ட ரதமோ என வியக்கத்தக்க அளவுக்கு விளங்கியது. சிவ கங்கைச் சீமை மக்கள் ஒருமுகமாகக் குப்பமுத்தாசாரியின் திறமைக்குப் புகழ் மாலை சூட்டினர். சீமையின் சீமான்களான மருது பாண்டியர்கள் ரதத்தைப் பார்வையிட்டனர். அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காளீசுவரர்தான் பாக்கியம் செய்தாரா, அன்றி காளீசுவரர் அருளால் குப்பமுத்தாசாரிதான் பாக்கியம் பெறப் போகிருரா வென்று மருது சகோதரர்கள் மனத்துள் வியத்து பாராட்டிக் கொண்டனர். வெள்ளோட்டத்திற்கு நாளும் குறிப்பிட்டாகிவிட்டது. குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. குண திசையில் கதிர்ச் செல்வனும் கனகனக்க எழுத்தான். மக்கள் கூட்டம் காளையார் கோயில் நாடிக் கடல்போலத் திரண்டது. மிகுது பாண்டியுள்களும், அவர்களுடைய பரிவாரங்களும் அரச தோரணையில், பக்திக்கோலம் பூண்டிருந்த காட்சி அனை த்ஈ ர் கம்பீரம்ாக ரதத்தில் அமர்ந்தார். அடுத்து மிருது சகோதரர்கள் ரதத்தில் ஏறி நின்றனர். பூசனைகள் முடிந்தன. - 'சிற்பியாரே! ரதத்தைச் செலுத்தலாமல்லன்.?’’ பெரிய மருதுவின் மலர்ந்த உதடுகள் அசைந்தன. ஆசாரி யாரும் அமைதியாகத் தலையசைத்தார். மக்கள் குழாம் வடத்தைப் பிடித்து ரதத்தை இழுத்தது. அப்போது பெருத்த எழுச்சிக் குரல் கிளம்பி வானே அதிரக்
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/109
Appearance