பக்கம்:பிள்ளைக்கலி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 அரசரிடம் நீட்டினர். அடுத்து இருகரம் கூப்பி வணங்க முயன்ருர்; முடியவில்லை. காளீசுவரர் அவரைத் தம்முடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். பெரிய மருது கண்களைத் துடைத்துக்கொண்டு, கடிதத்தைப் பிரித்தார். அதில் குப்பமுத்தாசாரியின் இறுதிக் குரல் ஒலித்தது: ‘அரசே! என்னை மன்னியுங்கள். தங்களிடம் காணிக்கை கேட்கும் எண்ணம் எனக்குக் கொஞ்சம்கூடக் கிடையாது. தங்கள் நலமே, என் நலம்; மக்கள் நலம்! ‘ரதத்தைத் தொடங்கினேன். தொடங்கியதும் முதலில் விஞயகர் சில உடைந்தது. அபசகுனம் கண்டு மனமுடைந்துபோனேன். பிறகு நாடி போட்டுப் பார்த்தேன். அது கூறியதோ மிகவும் பயங்கரம்! ‘ரதம் முடிவுற்றதும் வெள்ளோட்ட நாளில் இந்நாட்டு அரசனுயிருப்பவன் உயிர்ச்சேதம் காண்பான்; அந்தப்பலியை எந்த விதத்திலும் தடுக்க முடியாது: 'இதுபற்றித் தங்களிடம் கூற அஞ்சினேன். ஆகவே, நச்சுத்தேர்வு நடத்தத் தொடங்கினேன் - துணிந்தேன். அதனுல் ரதத்தை ஒடாமல் செய்து, பிறகு காணிக்கையின் பேரில் ஒருபொழுது அரச'ேைனன்: ரதத்தில் ஏறினேன். காளையார் திருவுள்ளம் எப்படி என்றுதான் பார்ப்போமே! காத்துவிட்டால் அவர் கருணைதான்! ஆளுல், நாடி ? அது ஒருபொழுதும் பொய்க்காது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவேளை, அப்படி நேருமானல், என்னை மன்னித்து, இறப்பிலே நான் அமைதி பெற என்ன வாழ்த்துங்கள்! --குப்பமுத்தாசாசி பெரிய மருது குழந்தைபோல் கேவிக் கேவி யழுதார். 'மருதுவந் தாலும்தே ரோடாது-அவன் மச்சனன் வந்தாலும் ஓடாது; தேருக்கு டையவன் குப்பமுத் தாசாரி தேர்வடம் தொட்டாலே தேரோடும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/112&oldid=1395731" இலிருந்து மீள்விக்கப்பட்டது