1 s 6 கமலக்கண்ணன் கவிஞர் மட்டுமல்ல; தத்துவ ஞானி; நல்ல அழகர்; கம்பீரமான தோற்றம் உடையவர். 'சந்துரு, இந்தக் கோடையில் உதகமண்டலம் போய்விட்டு வந்தபின் இரண்டு மூன்று மாதமாக நான் எழுதுகோவையே தொடவில்லை. உதகமண்டலத்தில் இருக்கும்போது கடைசியாக நான் எழுதிய கவிதையை உனக்குத் தரலாம். ஆனால், அது அரைகுறையாக இருக்கிறது. மீண்டும் அதை நிறைவாக்க என்னுல் இயலாதே!' 'எப்படியாவது அதை நிறைவு செய்து முடித்துக் கொடுங் களேன்' என்ற சந்துருவின் வேண்டுகோளுக்குக் கவியிடமிருந்து பதில் இல்லை. கவி கமலக்கண்ணன் விழிகளிலும் முகத்திலும் ஏக்கம் தேங்கி நிற்க மோட்டுவளையை மீண்டும் பார்த்தார். அங்கில்லாததும், எங்கிருப்பதென்று தெரியாததும், ஆளுல் எங்கோ நிச்சயமாக இருப்பதுமான ஏதோ ஒன்றைத் தேடித் துழாவுகின்ற பார்வையாக இருந்தது அது. அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து அடுத்தடுத்து நெட்டுயிர்த்தார் கவிஞர். உதவி யாசிரியர் மறுபடியும் தூண்டிக் கேட்கலானர்: "ஒரு வாரம் பத்துநாள் ஆலுைம் பரவாயில்லை. நீங்கள் அந்தக் கவிதையை முடித்துக் கொடுப்பதாக இருந்தால் நான் காத்திருந்து வாங்கிக் கொள்கிறேன். 'அந்தக் கவிதையை முடிக்க இப்போது என்னல் முடியுமா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. சந்துரு, அந்தக் கவிதைக்கு முதல் அளித்த சக்தியை - தூண்டுதல் தந்த சூழ் நிலையை - நான் மறுபடியும் அடைந்தால் ஒருவேளை என்னுல் அதை முடிக்க இயலும். சில அழகான கண்கள், சில எழில் வாய்ந்த முகங்கள், சில அற்புதமான புன்னகைகள், சில உள்ளம் உருக்கும் காட்சிகள் இவற்றைப் பார்த்துத் துண்டுதல் பிறக்கும்போதுதான் என் மனத்தில் கவிதைக்குரிய சொற்கள் விளைகின்றன. அல்லாத நேரங்களில் என் மனநிலம் தரிசாக வறண்டுவிடுகிறது. நாடெல்லாம் தெய்வமாகக் கொண்டாடும் கவி, சிறு குழந்தைபோல் வெள்ளைத்தனமாகத் தம் சொந்த ஆற்ருமையை வெளியிடுவதைக் கேட்டு மனம் உருகினர் உதவியாசிரியர். கவிஞரின் அழகிய கண்களில் எதையோ - கண், வாய், சிரிப்பு, முக்கு முகம் என்று ஒவ்வொன்முக நினைத்து ஒன்றுசேர்த்து யாரையோ - நினைவுபடுத்திக்கொள்ளத் தவிக்கும் துடிப்புத்
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/114
Appearance