பக்கம்:பிள்ளைக்கலி.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 7 தெரிந்தது. ஏக்கம் சுழன்றது. 'என்னுல் முடியாது சந்துரு. நினைப்புக்குள் அநுமானம் பண்ணிக் கொணர முடியாத அழகு அது. பார்க்கும்போதுதான் என்மனம் துள்ளியது. நினைக்கும் போது வர மாட்டேனென்கிறது.' கவிஞரின் கண்களில் நீர் மல்கிற்று, நாத் தழுதழுத்தது. 'சந்துரு !' 'உங்கள் மனம் ஏதோ கஷ்டப்படுகிறது.' 'அப்படி ஒன்றும் இல்லே, சந்துரு. ஆனால், உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். கூசாமல் பதில் சொல்வாயா ?” 'என்ன ? கேளுங்களேன்.' 'இந்த ஐம்பத்திரண்டு வயசுக் காலத்தில் எப்போதாவது ஒரு பெண்ணைப் பார்த்ததும் மனம் பித்தாகிக் கல்யாணம் பண்ணிக் கொண்டுவிடவேண்டுமென்ற துடிப்பு எனக்கு உண்டாகி யிருக்குமா ? உண்டாயிற்று என்ருல் நம்புவார்களா ?” 'நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே! நீங்களாகத்தானே ஏதோ கொள்கை வகுத்துக்கொண்டு துறவி மாதிரி வாழ்ந்து வருகிறீர்கள் ?' 'தவறு, சந்துரு. அன்று உதகமண்டலத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றவரைதான் என் மனமும் எண்ணங் களும் துறவிபோல் இருந்தன. இப்போது அப்படி இல்லையப்பா. நான் என் மனத்தில் அவளை நினைவுகளாகவும், கனவுகளாகவும் சுமந்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன். வெட்கத்தைவிட்டு இதை உன்னிடம் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதோ இந்த டைரியில் மே மாதம் பதினைந்தாம் தேதியிலிருந்து இருபதாம் தேதிவரையில் உள்ளவற்றைப் படித்துப்பார். சொல்கிறேன்' என்று மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு டைரியைச் சந்திர சேகரனிடம் நீட்டினர், கவி கமலக்கண்ணன். சந்திரசேகரன் இரண்டு கைகளையும் நீட்டி மரியாதையாக அதை வாங்கி விரித்துப் படிக்கத் தொடங்கினர். அவருக்கு வியப்புத் தாங்கவில்லை. கவி, அங்கில்லாததும், எங்கிருப்பதென்று தெரியாததும், ஆனல் எங்கோ நிச்சயமாக இருப்பதுமான ஏதோ ஒன்றை அங்கம் அங்கமாக நினைத்துக் கூட்டி இணைத்துக் காண முயலும் பார்வையால் மீண்டும் மோட்டுவளையை வெறித்துப் பார்க்கலானர். -