பக்கம்:பிள்ளைக்கலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


'அம்மா சாதத்தை வடிச்சிக்கிட்டிருக்கா, அப்பா!' சரி! இதோ வாரேன், போ!' " வாயேன்! " 'வர்ரேன்ன, போட்டி உள்ளே!' காப்பி ஆறிப்போயிடும், அப்பா!' 'இதோ, ஒரு நிமிஷம்!’ என்று சொல்லிக் கொண்டு, உள்ளே சென்ருர், மாமா! நீ என்ன கொண்டாந்தே?" என்று கேட்டுக் கொண்டு சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து கழுத்தி விருக்கும் நெக் டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அல்மு . அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்குக் கழுத்து வலிக்கும்!” என்ருர் சுந்தரம் பிள்ளை. வலிக்காதே!' என்று மறுபடியும் ஆரம்பித்தாள். முருகதாசரும், மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்தியவண்ணம், உள்ளே நுழைந்தார். 'என்னப்பா, முனு டம்ள்ர் கொண்டாந்தே! எனக் இல்லையா?’’ 'உனக்கென்னட்டி இங்கே அம்மா கூடப் போய்ச் சாப் பிடு: 'மாட்டேன்’ என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை, முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார். சுந்தரம் வாங்கி மடக். மடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, “காப்பி வெகு ஜோர்' என்று சர்டிபிகேட் கொடுத்தான். மற்ருெரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப் பட்டது. 'மாமா! எனக்கில்லையா!' என்று அவரிடம் சென்று ஒண்டினுள் அலமு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/12&oldid=1395628" இலிருந்து மீள்விக்கப்பட்டது