பக்கம்:பிள்ளைக்கலி.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 24 'மாலையில் தயாராக இருங்கள். வந்து அழைத்துப் போகிறேன்' என்று கூறி சந்திரசேகரன் போய்விட்டார். கவிஞர் மகிழ்ச்சி பொங்கும் மனநிலையோடு காத்திருந்தார். ஆறு மணிக்குச் சந்திரசேகரன் வந்து அழைத்துப் போளுர், அந்த வீட்டுக் கூடத்தில் கவிஞரை உட்கார்த்திவிட்டு உள்ளே போய் அவளை அழைத்து வந்தார் உதவியாசிரியர். அதே மஞ்சள் வாயில் புடவை. வைர பேசரியும் தோடுகளும் சேர்ந்து சிரிப்பதுபோல் இதழ்களில் சுரந்த நகை, மெட்டியும் கொலுசும் தாளமிட அன்னநடை நடந்து கவிஞருக்கு முன் வந்து கைகூப்பி வணங்கிளுள் அந்தப் பெண். வணங்குமுன் கையில் இருந்த வேனில் மலர்கள் புத்தகத்தைக் கவிஞருக்கு முன்பிருந்த மேஜை யில் வைத்தாள். வியப்போடு கவிஞர் அதன் முதல் பக்கத்தைப் பிரித்தார். அவருடைய கையெழுத்து அன்று எழுதிக் கொடுத்தபடியே முத்து முத்தாக இருந்தது. அவள் இனிய குரலில் அவரை நலம் விசாரித்தாள். 'பேசிக் கொண்டிருங்கள். காபி கலந்து கொண்டு வருகி றேன்' என்று கூறி அவரையும், உதவியாசிரியரையும் விட்டு விட்டு உள்ளே மறைந்தாள். கையில் வேனில் மலர்களை'ப் புரட்டிக்கொண்டே சந்துருவிடம் கேள்விகள் கேட்கலானர் கவிஞர். அவர் குரலில் உல்லாச வெள்ளம். 'சந்துரு, இந்தப் பெண் கல்லூரியில் படிக்கிருளா ? 'படித்து முடித்துவிட்டாள்.' 'இவள் மாதிரி அழகியை நீ எங்காவது பார்த்திருக்கிருயா சந்துரு ?" ‘‘(మడి). ” 'இந்தப் பெண் உனக்கு உறவோ ?” "உறவுதான்." 'நெருங்கிய உறவோ ?” 'மிகவும் நெருங்கிய உறவு.' சிறிது நேரம் இருவரிடையே மெளனம் நிலவுகிறது. கவிஞர் கண்களில் ஒரே தாகம், அழகின் வெள்ளத்தையே கண்டுவிட்டது போல் முகம் மலர்ந்திருக்கிறது அவருக்கு. சந்துரு அவரிடம் மீண்டும் கேட்கிருர்: "பாட்டை நாளைக்கே முடித்துக் கொடுத்து விடுவீர்களா சார் ?”