பக்கம்:பிள்ளைக்கலி.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வடு கோமகள் 'திக்கெட்டும் சிலிர்ப்பு நிறைந்திருந்தது. தத்தமக்கு உரிய வற்றின் வரவிற்காக ஏங்கும் வேளை எழுந்தது. தூரத்தே கண்கள் துழாவின. நீண்டுகிடந்த சாலையை அடுத்துப் புதிய அசைவைக் கண்கள் தேடின. மனம் மட்டும்... இதோ அவளே வருகிருள். மேகப் பட்டாடையிலிருந்து முகம் விலக்கி வரும் திங்கள் நடை பயில்கிறது. என்னே இலக்காக நகர்ந்து வருகிறது. உணர்வு ஏடுகள் தடம் புரள்கின்றன. உரிமையாக வேண்டி யவள்தான் அவள். உயிருக்குயிராக ஒன்றி வாழ்ந்து, எங்களுக்கே புரியக்கூடிய சைகைகளில் மட்டும், இனம் புரியாக் கவர்ச்.இ. தெறிக்க வேண்டிய ஒன்று, கூடிவந்த மேகம் போல் பிரிகின்றது. அலைக் காற்று வீசிவீசிச் சிதறிவிட்டன மேகங்கள். மணவறையில் ஒன்றவேண்டிய தருணத்தில், கற்பனைகளில் நான் மிதந்தபோது, அவள் எங்கோ பறந்து விட்டாள் ... அதிர்ச்சி, ஆத்திரம் எல்லாம் மறைந்து நிதானமானபின் ஏக்கமே நிலைத்து விட்டது. அவள் செய்த உதாசீனமே பிரிவுத் துயரின் வித்தாகிவிட்டது. என்ன பிரிவுத் துயரா ? ஆம்! என்ருே அவளுடன் காலம், காலமாய் வாழ்ந்த நினைவின் பிரிவுத் துயர். ஆனல், இன்று ஒடிப்போன எழில் நாடி வந்துள்ளது. அது உண்மையேயெனில் அவள் உள்ளம் மூடு மந்திரம்தானே ? ஆறு மாதத்திற்குமுன் மன மாலே ஏற்க விரும்பாத ஒருவனுடன், இன்று நட்புறவு கொண்டாடும் பெண்ணைப் பற்றி எந்த முடிவுக்குத்தான் வருவது ? அன்று துார ஓடி, இன்று அருகே வந்து சிரிப்பதன் பொருள் என்னவாக இருக்க முடியும் ? அவள் நெருங்கி விட்டாள். நான் நிமிர்ந்தேன். முதன் முதலில் அன்று கண்ட விஜயாவின் தோற்றத்தில் ஒரு தனி மெருகு இருந்தது. இன்று காணும் இவளிலும் ஒரு தெய்வீகக் கவர்ச்சி! டெண்மை மொட்டில் ஒரு மதுரம், பூவில் ஒரு புதுமை, காயில் ஒரு கனிவு, கனியில் ஒரு இனிமை என்று நீண்டு நீண்டு போகும் ஒன்றுதான் போலிருக்கிறது! அத்தி நேரத்தில் தொடு வானத்தின் வண்ணச் சேர்க்கைதான் யெளவனம். அது சோபித :மானது, சுத்தமானது, சொர்க்கமயமானதும்கூட. பிறரைச் சொக்க வைத்து, தானும் சுழன்றுவிடும் யெளவனம். அவள்