பக்கம்:பிள்ளைக்கலி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 I விஜயா சிரித்தாள்! 'இல்ல்ை விஜயா! அப்படிப் பொய் சொல்ல மனம் வர வில்லை. புற எழிலின் காந்தத்தில் கட்டுப்பட்டு விட்டேன். அதுவுங்கூட மனங்கள் பிணைந்த கூட்டுறவு தந்த உரிமையில்தான். இன்றேல் புறம் தவறுடையதுதான்!” - அவள் நகைத்தாள். அந்த ஒலியலைகள் தூரத்தே கேட்ட குயில் குரலுக்குப் பின்னணியாகியது. நான் விழித்தேன். 'நமது இந்தச் சந்திப்பு வியப்பாக இல்லை ? விஜயாவின் குரலில், தான் வினவும் நயம் தெரிந்தது. வியப்புதான்! உலகில் என்னவோ நடந்து நமது சந் திப்பைச் சின்ன விஷயமாக்கி விடுகிறதே. ஏதோ பூர்வ ஜென்ம விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே, அதுதான் இது: விஜயா பதில் பேசவில்லை. அவள் பார்த்திருந்த மேற்குத் திசையில், மலேமுகடு, பனியில் உறைந்திருந்தது. விண்ணேத் தழுவிய மேகங்கள் மலேயோரம் நழுவி விழுவதைப்போல் நகர்ந்து கொண்டிருந்தன. காதில் மோதிய குளிர்காற்று, கேசங்களை ஊடுருவிப் பரந்தது. "விஜயா!' "சட் டென்று அவள் திரும்பினுள். 'இப்போது என்ன குடிமுழுகிவிட்டது ? நீ சரி என்ருல்...' தெள்ளிய விழிகளில் குழப்பம் சேர விஜயா திமிர்ந்தாள். 'உண்மையில் நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு நான் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட அவமானத்தைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்க எனக்கு அவகாசம் வேண்டி யிருந்தது. அதைக் கூறவே நான் வந்தேன்...' எனக்குச் சினம் மூண்டது. 'நான் யாரோ, நீ யாரோ? பின் ஏன் எனக்கு நீ சம்ாதானம் சொல்ல வேண்டும் ?’’ 'தயவுசெய்து கோபிக்காதீர்கள். நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்...திருமணத்திற்கு நான் இசைவு தந்தது உண்மை. நீங்கள் என்னை முன்பே பார்த்திருப்பதாகச் சொன்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/129&oldid=1395748" இலிருந்து மீள்விக்கப்பட்டது