பக்கம்:பிள்ளைக்கலி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 5 'வாடி, நாம் ரெண்டுபேரும் சாப்பிடுவோம்' என்ருர் முருகதாசர். 'மாமா கூடத்தான்!' என்றது குழந்தை. சுப்பிரமணிய பிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார். பாதியானதும், 'போதும்!' என்றது குழந்தை. 'இந்தாருங்க சார்!’ என்று மற்ற டம்ளரையும் நீட்டினர் முருகதாசர். ‘'வேண்டாம் வேண்டாம்! இதுவே போதும்!’ என்ருர் சுப்பிரமணிய பிள்ளை. "நான்சென்ஸ்' என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற் படுத்தியதைத் தாம் வாங்கிக் கொண்டார் தாசர். 'நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!' என்று எழுந்தார் சுந்தரம். - 'அதற்குள்ளாகவா? வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!' என்ருர் முருகதாசர். கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டு வெளியேறினர் சுந்தரம். கையில் இருந்த புகையிலையை வாயில் ஒதுக்கிவிட்டு சிறிது சிரமத்துடன், தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை. தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, சுப்பிரமணி யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ச் இருக்கிறதா ? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!’ என்ருர் முருகதாசர். 'ஏது அவசரம் ?’’ 'சம்பளம் போடலே இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...... திங்கட்கிழமை கொடுத்து விடுகிறேன்!” 'அதற்கென்ன......?’ பர்ஸை எடுத்துப் பார்த்து விட்டு, 'இப்போ என் கையில் இதுதான் இருக்கிறது!’ என்று ஒர் எட்டணுவைக் கொடுத்தார். சுப்பிரமணியம். 'இது போதாதே!' என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக்கொண்டார். முருகதாசர்.