பக்கம்:பிள்ளைக்கலி.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 கள். நானும் உங்கள் புகைப்படத்தைத்தான் பார்த்தேன். உங்களைத் திருமணத்திற்கு முதல் நாளிரவுதான் பார்த்தேன். அப்போது இந்த வடுவை..." அவள் கை என் இடது பக்க நெற்றிப் பொட்டருகே நீண்டது. என் தலையில், நேர் எதிரே நின்ற மலே இடிந்து விழுந்தது போலிருந்தது. உடம்பெல்லாம் அவமானத்தால் கூனிக் குறு கியது. வடு. வடு- அந்தோ! அதுவே என் வாழ்வின் எமய்ை வந்ததா? மனையில் அமரப் போகிறவளுக்கு, கணவனுக்ப் போகிறவனின் இந்த வடு ஒரு பயங்கரமாகத் திகழ்ந்திருந்தால்... ஐயோ! பயங்கரம் பயங்கரம்தான்...! என் கைகள் விஜயாவைத் தொழுதன. 'விஜயா விஜயா! தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். முடவன் எங்கே... ? கொம்புத் தேன் எங்கே ? நான் தவருண ஆசை கொண்டேன். அதுவுமன்றி, உங்களிடம், உங்கள் அநுமதியின்றி ஏதோ பேசிவிட்டேன். தயவு செய்து இன்ைெரு முறை மட்டும் என் வடுவைச் சுட்டிக் காட்டி என்ன அவமதிக்காதீர்கள்... வேண்டாம்... நான் போய்விடுகிறேன்.' என் கண்கள் நீரைக் கொட்டின. 'நில்லுங்கள், நில்லுங்கள்' என்ற விஜயாவின் குரலோசை பின் தங்க, என் கால்கள் தறிகெட்டு ஓடின. மனேவேகம் என்னை, என் முகத்தை, விஜயாவிடமிருந்து, இல்லே உலகத்திட மிருந்தே மறைத்துக் கொள்ளும்படி அழுதது. கதவைத் தாளிட்டு விட்டுப் பொத் தென்று கட்டிவில் வீழ்ந்தேன். விஜயாவின் வார்த்தைகள் உள்ளத்தில் நெருஞ்சி முட்கள்போல் ஒட்டிக் கொண்டன. அது புரண்டு புரண்டு குத்தும்போது எடுக்க வகையற்ற நான் நொந்து சாகவேண்டியது தானே? என்னுள் மூண்டெழுந்த வெறி எழுந்தோடி கண்ணு டியைத் தேடியது. உலகத்தினர் தமது அழகைக் காணவும், கொஞ்சம் குறை இருந்தால், களைந்து மறைக்கவும் உபயோகப் படுத்தும் கண்ணுடியை, நானும் பைத்தியம்போல் வாங்கி வைத் திருந்தேன். முகம் தெரிகிறது. இடம், வலம் மாற்றமாக. ஆளுல் நெற்றிப் பொட்டருகே, கேசத்தால் நான் மறைக்க முயன்று. தோல்வி கண்ட வடு கோரமான தோற்றத்துடன் தெரிந்தது. முக்கும் விழியுமாகவும், சிவப்பாய், ஆணழகுடனும் இருந்தால்