罩3金 விட்டு, வந்த சிறிது நாட்களிலேயே இறந்துவிட்டார். உங்களை முதன் முதல் கண்டதும், அவர் நினைவுதான் கிளர்ந்தது. அந்த எண்ண ஓட்டம் உங்கள் மீதே சரிய, நீங்களே என் மாண்டு விட்ட அண்ணுவாகத் தோன்றினர்கள். அந்தக் கடைசி நிமிடத் தில், நான் கூறும் இந்த மறுப்பை என் பெற்ருேர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் என்னைப் பைத்தியம் என்பார்கள். அந்த நிலையில் நான் மணமேடையை உதறிவிட்டு வெளியேறுவது ஒன்றுதான் என்னல் செய்ய முடிந்த ஒன்று. இப்போது சொல்லுங்கள், நான் தவறு செய்யவில்லை. என் மன ஆழத்தில் புதைந்து கிடந்த சகோதர உணர்ச்சி உங்களிடம் சீறிப் பாய்கிறது. ஒரு வகையில் நான் உங்களுக்கு உபகாரம் செய்திருக்கிறேன். உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக் கிறது. நமக்கு மட்டும் திருமணமாகி இருந்தால்... அதை எண்ணவே கூசுகிறது... நான் வருகிறேன்... என்னை மன்னித்து விடுங்கள்...' நான் திகைத்தேன். மஞ்சு கவிந்திருந்த மலையுச்சி, ஞாயிற்றின் கதிரொளியால் உருகி வடிந்தது. 'விஜயா இது நான் சற்றும் எதிர்பாராத விநோத மான மனே தத்துவம். உன் மனநிலையை நான் ஒருவாறு உணரு கிறேன். உள்ளெழுச்சிகளுக்கு நாம் ஒரு விதத்தில் கடமைப்பட் டிருக்கிருேம். அவற்றிற்கு மதிப்புத் தராவிட்டால் பல தவிப்பு களுக்கு உள்ளாக நேரிடும். நீ செய்தது சரிதான்...” விஜயா எழுந்து நடந்தாள். பல்கணி வழியாகத் தெரிந்த அவள் உருவம் மறைந்தபோது மன மையத்தில் இதுவரை நெருடிய தாழ்வுணர்ச்சி மடிந்துவிட்டது!
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/132
Appearance