1.37 களேப் பற்றிக் குறைகூற ஆ மடதது விட்டாள். ஒருவாறு பொங்கலைச் சுவைத்து விட்டு மீண்டும் படுத்துக்கொண்டே வாழ்த்துகளைப் புரட்டினேன். சேகரிடமிருந்தும் ஒரு வாழ்த்து வந்திருந்தது. குன்றுகளுக்கு இடையே நிற்கின்ற ஒரு கோபுரம். சுற்றிலும் பசுமை. மண்ணி விருந்து விண்ணளாவ அமைந்த பச்சைப் பாலம்போல அழகாக இருந்தது. அவற்றுக்கு மேலே நீல வானம். சிறிது நேரம் அந்தக் காட்சியில் என்னை மறந்து போனேன். பிறகு அதன் பின்புறத்தைப் புரட்டினேன். வாழ்த்துக்குக் கீழே ஏதோ எழுதி யிருந்தான்: 'அன்புள்ள ஐயா! ஏன் படித்தோம், பட்டம் பெற்ருேம் என்று வருந்துகிறேன். வேலை கிடைக்கவில்லை. வேறு தொழில் செய்யப் பணம் இல்லை. உதவ வேண்டுகிறேன்' என்று குறித் திருந்தான். சேகர் இரண்டு ஆண்டுகட்குமுன் படித்து எம். ஏ. பட்டம் பெற்றவன். அவன் குடும்பம் மிகவும் ஏழைக் குடும்பம். பல தொல்லைகளுக்கு இடையே எப்படியோ படித்து முதல் வகுப்பிலும் தேறிவிட்டான். அவனுக்கு உதவ வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை. சென்ற ஆண்டுகூட ஒரு கல்லூரி முதல்வருக்குச் சேகரின் திறமையையும், பண்பையும், முயற்சியையும், விளக்கி அவன் வறிய நிலையையும் குறித்து, காலியாயிருக்கும் விரிவுரை யாளர் வேலை அவனுக்குத் தந்தருளுமாறு வேண்டி எழுதியிருந் தேன். அந்த முதல்வர் என்ைேடு ஒன்ருகக் கற்றவர். ஒரே விடுதி அறையில் மூன்ருண்டு பிரியாது என்னோடு வாழ்ந்தவர். அந்த நம்பிக்கையில் எழுதியிருந்தேன். ஆனல் அவரோ அன்புள்ள சு!! உன் சிபாரிசுக் கடிதம் கிடைத்தது. அந்தக் காலத்தை நினைத்துக் கொண்டேன். நீயும் நானும் பயின்ற அந்தக் காலத்தில் ஒருவரிடம் ஒன்று கேட்டுப் பெறக் கூடாது. நாமே முயன்று உழைத்துப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பொருள் இல்லாமலே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் நீ வெறியனுக வாழ்ந்த அந்தக் காலத்தை நினைத்துக் கொண்டேன். அப்படிப்பட்ட நீ என்னிடம் முதன் முறை வேண்டிய இந்த உதவியைச் செய்ய முடிவு செய்துகொண்டேன். யார் எப்படித் தடுத்தாலும் நீ சிபாரிசு செய்த மாணவருக்கே கொடுத்துவிட முடிவு செய்தேன். கல்லூரி அறக்குழுவினருள் எனக்குத் தெரிந்த சிலருக்கும் அறக்
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/135
Appearance