பக்கம்:பிள்ளைக்கலி.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

輩38 குழுத் தலைவருக்கும் முன்னரே கூறி வேண்டிக் கொண்டேன். ஒருவாறு நேர்முகத் தேர்வு நிகழ்ந்து முடிந்துவிட்டது. நீ அனுப்பிய மாணவன் இயல்பாகவே எல்லாரையும்விட நன்ருகவும் வினயமாகவும் நடந்து கொண்டான். எனவே ஒருமனதாக எல்லோரும் தேர்ந்தெடுக்கும் நிலையிலிருந்தோம். அப்போது கல்லூரித் தலைவரை யாரோ தொலைபேசியில் அழைப்பதாக இடையில் ஆள் ஒருவன் வந்து சொன்னன். போய்க் கேட்டு விட்டு வந்த தலைவர், குழுவில் தனக்கு வேண்டிய பலரைத் தனியே அழைத்துச் சென்று சில நிமிடம் பேசினர். திரும்பி வந்து நாங்கள் யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாம் வகுப்பில் தேறிய யாரோ ஒருத்தன் பெயரைக் குறிப்பிட்டு அவனையே தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டார். எனக்குக் கோபம் ஒரு பக்கம்; வருத்தம் ஒரு பக்கம். எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு 'அந்தப் பையன் இரண்டாம் வகுப்பில் தேறியவன். அவன் சரியாகவும் விடை கூறவில்லை. ஒழுங்காகவும் நடந்துகொள்ளவில்லை. இப்படிப்பட்டவனை விரிவுரையாளகைப் போட்டால் 'கல்லூரி ஒழுக்கம் உருப்பட்ட மாதிரிதான்' என்று எல்லோர் காதிலும் விழும்படி முணுமுணுத்தேன். என் முனு முணுப்பைக் கேட்ட தலைவரும் மிஸ்டர் நரசிம்மம்! நீங்கள் கல்லூரி ஒழுக்கம் போய்விடும் என்று பயப்படுகிறீர்கள். நாங்களோ கல்லூரியே போய்விடுமோ என்று பயப்படுகிருேம். நான் சொல்பவருக்கு வேலை கொடுத்தால் கல்லூரி வளர்ச்சிக்குப் பல நன்மைகள் ஏற்படும். மேலும் அவரின் பெற்ருேர் கல்லூரிக்கு நன்கொடை வேறு தருவதாக என்னைப் பார்த்து முன்னமேயே சொல்லியிருக்கிருர்’ என்ருர். எனவே நீ உன் வாழ்நாளில் முதன்முதலாக கைநீட்டிக் கேட்ட ஒன்றே ஒன்றையுங்கூட நிறை வேற்ற முடியாது வருந்துகிறேன். நரசிம்மம்' என்ற அந்தக் கடிதம் அப்படியே மீண்டும் என் மனக்கண்முன் தோன்றிற்று. சேகருக்கு என்ன எழுதுவது, எப்படி உதவுவது என்ற நினைவி லேயே மற்ற வாழ்த்துகளையும் ஒருவாறு புரட்டிக் கொண்டே தூங்கிவிட்டேன். எழுந்தபோது மணி பிற்பகல் நான்காகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு கடற்கரைக் கூட்டத்துக்குப் புறப்பட ஆயத்த மானேன். அப்போது நம்மாழ்வார், என் பெரிய பையனின் நண்பன் ஏதோ புகைப்படங்களைக் கொண்டுவந்து காட்டிக் கொண்டிருந்தான். 'அப்பா. இதோ பாருங்கள் நாங்கள் காஷ்மீரில் எடுத்துக் கொண்ட புகைப்படம்' என்று தன் கையில் வைத்துக் கொண்டே