பக்கம்:பிள்ளைக்கலி.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


காட்டினன். அதில் அவனும் அவன் நண்பனும் ஆசிரியர் ஒருவரும் படகு ஒன்றில் அமர்ந்திருந்தனர். ஏரியின் அழகான பின்னணியில் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சி கன்னியாகுமரியில் நானும் நரசிம்மனும் எங்கள் பேராசிரி யரோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சியை நினைவூட் டியது. நரசிம்மன் புகைப்படத்திற்கென அழகாக போஸ்’ கொடுத்து நின்றது, நான் சட்டைப் பித்தான்களையெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று கவனித்துப் பார்த்துக் கொண் டது, எங்கள் இருவர் நிலைகளையும் பார்த்துப் பேராசிரியர் செய்த புன்னகை-இவை யாவும் மறக்க முடியாதவாறு நிலைபெற்று விட்ட அந்தப் புகைப்பட நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. உடனே ஏதோ தவறு செய்துவிட்டவன்போல் பதற்றத்தோடு போய் கட்டில்மேல் இருந்த வாழ்த்துகளை எல்லாம் ஒன்று திரட்டி அனுப்பியவர்கள் பெயர்களே எல்லாம் ஒன்றுவிடாமல் கவனமாகப் பார்த்தேன். கல்லூரியை விட்ட அந்த நாளிலிருந்து சென்ற ஆண்டுகூட, பொங்கலன்று தொடர்ந்து வந்து கொண் டிருந்த ஒருவருடைய வாழ்த்து மட்டும் காணப்படவில்லை. மீண்டும் புரட்டினேன். கையெழுத்தை எல்லாம் துருவித் துருவிப் பார்த்தேன். அவர் கையெழுத்து அடித்தல் திருத்தல் இல்லாமல் மணிமணியாக அமைந்த-அவர் கையெழுத்து-என் அறிவில், ஆருயிருள், ஆன்மாவில் ஊறியது ஆயிற்றே; அந்தக் கையெழுத்து எந்த வாழ்த்திலும் இல்லை. ஒருக்கால் ஒன்ருேடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்குமோ என்று என் மனம் ஐயுற்றது. ஏனெனில் அந்த வாழ்த்து வரவில்லை என என் அறிவு தெளிவாகச் சொன் லுைம் அதை மனம் கேட்க விரும்பவில்லை. மீண்டும் ஒவ்வொரு வாழ்த்தையும் தனித்தனியாகத் தடவித் தடவிப் பார்த்தேன். ஒரிரு வாழ்த்துகள் ஒன்றனுள் ஒன்ருய்ச் சிக்கிக் கொண்டு இருந்தன. அவற்றை ஆர்வத்தோடு பிரித்துப் பார்த்தேன். அவையும் ஏமாற்றமே அளித்தன. நேரே என்னுடைய புத்தக அறைக்குச் சென்று கல்லூரி நாளில் நான் எழுதிய நாட்குறிப்பை எடுத்துப் புரட்டினேன். அதில் ஒரு பக்கத்தில் என் கண்கள் திலைகுத்தி நின்றுவிட்டன: சென்னை 7–4–48 இன்று என் பேராசிரியரைச் சந்தித்தேன். அவர் என் ஆசிரியர் மட்டும் அல்லர். என்னை ஆளாக்கிய அப்பனும் அவரே; அம்மையும் அவரே. பல வகையில் பிற்போக்காகக் கல்லூரியில் நுழைந்த நான் எல்லா வகையிலும் உயர்ந்தோ