பக்கம்:பிள்ளைக்கலி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星强0 குக வெளியேறக் காரணமாக இருந்தவரே அவர்தான். பால் நினைந்து ஊட்டும் தாய்போல் என்னைப் பாதுகாத்து வளர்த்து உருவாக்கிய என் ஆசிரியர்பால் இன்று கண்கலங்க விடை பெற்றுக் கொண்டேன். 'ஐயா! என்னை மறந்து விடாதீங்க. உங்கள் பசுமை யான நினைவுகளால் வாழ்பவன் நான்...' என்று கண் கலங் கியவாறு ஏதேதோ சொல்லி வேண்டிக் கொண்டேன். அவர் ஆறுதலாக என் தோள்மேல் கை வைத்தபடியே 'தம்பி சுந்தரம்: ஒவ்வொரு ஆண்டும் ஓரிரு மாணவர் உன்னைப் போல் எனக்கு வாய்க்கின்றனர். அவர்களை மறக்க முடிய வில்லை. என் உயிரோடு அவர்களும் ஒன்றிவிடுகின்றனர். ஆளுல் பிரித்தபின் அவர்களுள் பலரைச் சந்திக்க இயலாம லேயே போய்விடுகிறது. அதற்காக ஆண்டாண்டு பொங்க லன்று தவருது என் வாழ்த்துகளை அனுப்பி வருகிறேன். உனக்கும் அவ்வாறே அனுப்புவேன். என் உயிரோடு ஒன்றி விளங்கும் உங்களுக்கு ஏதேனும் ஒரு பொங்கலுக்கு வாழ்த்து வரவில்லை என்ருல்-நான் இல்லை. அதாவது என் உயிர் இல்லை என்று நினைத்துக்கொள்' அதற்கு மேல் என்னுல் படிக்க முடியவில்லை. கண்ணிர் கீழிமைகளில் நிறைந்து எழுத்துகளை மறைத்துவிட்டது!