உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五盔& ஊருக்குச் சென்றிருந்த பெரியகருப்பன் திரும்பி வருவதைக் கண்டு, போர்வை நழுவியதையும் கவனியாது, பரபரப்புடன் எழுந்து உட்கார்ந்தான் சுடலைமாடன். ‘இன்றைக்கு எப்படியும் கடுதாசி வந்திருக்கும்’ என்ற நம்பிக்கை தலைதுாக்கியது. உடலிலிருந்த நடுக்கம் தணிந்து சிறிது தெம்பு ஏற்பட்டது. பெரிய கருப்பன் நெருங்கி வந்தான். 'தபால்காரரைப் பார்த்தியா ? என்று தினமும்தான் கேட்கிருன் இந்தக் கிழவன். காத்திருந்து பார்த்திட்டு வந்ததினலேதான் இம்புட்டு நேரமாகிப் போச்சு' என்று சொல்லிக் கொண்டே சோற்றுப் பொட்டணத்தைத் திண்ணையின் மீது வைத்தான் பெரியகருப்பன். 'கடுதாசி, வந்திருக்கா ?' என்று கேட்பதிலேதான் இந்தக் கிழவனுக்கு எவ்வளவு ஆவல். பெரிய கருப்பனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. 'கடைசியிலே ஒண்ணும் வரலேயின்னு தபால்காரர் சொல் லிட்டாரு என்ருன். விளக்கு அணைந்ததுபோல, சுடலைமாடனின் முகத்திலே இருள் சூழ்ந்தது. 'நல்லாப் பாக்கச் சொன்னியா ?’ என்று திரும்பவும் கேட்ட குரலிலே நடுக்கம் நிறைந்திருந்தது. 'என்னத்தை நினைச்சுத்தான் உனக்குப் பித்துப் பிடிச் சிருக்கோ அதுவும் தெரியலே. எழுதினத்தானே கடுதாசி வரும்!" என்று அனுதாபத்தோடு சொன்னன் பெரிய கருப்பன். சுடலைமாடன் எதையோ முனகியவாறு, முழங்கால்களைக் கட்டிக் கொண்டு, முகத்தைக் கவிழ்த்துக் கொண்டான். சோறு வாங்கியாந்திருக்கேன்' என்று பெரிய கருப்பன் சொன்னது, அவன் மெளனத்தைக் கலைக்கவில்லை. இப்படியே இன்னும் எவ்வளவு நேரமோ! இருபது வருடங்களுக்கு முன்பாக, அதோ, மேற்கு மூலையில் நுழைவாசலுக்குச் சற்று தள்ளி, இன்றைக்கு இடிந்தும் சரிந்தும் கிடக்கும் அந்த வீட்டிலேதான் சுடலைமாடன் இல்லறம் நடத் தியது. மனைவி மாரியம்மாளின்மீது அவன் உயிரையே வைத்திருந் தான். அவளும் அப்படித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/140&oldid=1395759" இலிருந்து மீள்விக்கப்பட்டது