பக்கம்:பிள்ளைக்கலி.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


பக்கத்திலே சிம்னி விளக்குப் புகைந்து கொண்டிருந்தது. அவன் மகள் செல்லி-மாரியம்மாள் விட்டுச் சென்ற செல்வம்சுருண்டு படுத்திருந்தாள். சிறுமியாக இருக்கும்போது, மாரியம்மாளும் செல்லியைப் போலவேதிான் இருந்திருப்பாள், அதே முத்திரை. சுடலைமாடன், மகளைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். மாரியம்மாள் சாகவில்லை. மகள் உருவிலே அவனுடனே தான் இருக்கிருள். புதியவளாக இங்கே நுழைகிறவள் செல்லியை அன்போடு பாதுகாப்பாள் என்பது என்ன நிச்சயம் ? அந்த நினைவே வேண்டி யதில்லை. பிணம் காப்பவன் பெற்ற பிள்ளை என்ற சொல்லே இல்லாதவாறு செல்லியை வளர்த்து ஆளாக்க வேண்டும். இனி மேல் - சுடலைமாடன் உயிர் வாழ்வதும், உழைப்பதும் அவளுக் காகவேதான். விடியும் வரையிலும் தலைசாய்க்காது, இந்த உறுதிப்பாட்டை மனத்திலே நிலையாக இருத்திக் கொண்டான் சுடலைமாடன். விடிந்ததும்-கதவை இழுத்துப் பூட்டிவிட்டு, மகளைக் கையிலே பிடித்துக் கொண்டு எங்கோ கிளம்பிவிட்டான். செல்லி -இந்தச் சுடுகாட்டிலே குடியிருந்தால் செல்லம்மாளாக மாற முடியுமா ? நான்கு தினங்களுக்குப் பிறகு சுடலைமாடன் மட்டும் திரும்பி வந்தான். மகளைப் பற்றிக் கேட்டபோது படிக்கப் போட்டிருக் கேன் என்ற சுருக்கமான பதிலே கிடைத்தது. மாதம் தவருமல் மடியில் பணத்தையும் கட்டிக்கொண்டு, மகளைப் பார்க்கப் போய்வருவான் சுடலை. செல்லி அல்ல, செல்லம்மாளை அவன் பெற்ற பிள்ளை என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கிறதாம். செல்லம்மாள் அப்படி இருக்கிருளாம். பெருமையாகச் சொல்லிக் கொள்வான். இப்படியே வருடங்கள் உருண்டன. 'ஒருவாட்டியாவது மகளை இங்கே கூட்டியாந்தா என்ன ? நாங்கல்லாம் பாக்கவேணுமா ? என்று பெரியகருப்பன் அடிக்கடி கேட்டான். "இங்கே என்ன இருக்கு ?. சுடுகாட்டுச் சாம்பலையும் - எருவாட்டி மூட்டத்தையும் பார்த்தா எம்புள்ளே நெஞ்சொடிஞ்சு