1 4.5 போகும்' என்று சொல்லிவிடுவான், அதற்குமேல் மகளைப் பற்றி எதுவும் சொல்லமாட்டான். மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போதெல்லாம் பூரித்துப் போனவளுகவே வருவான். ‘'இப்ப, செல்லம்மா நெடுநெடுன்னு வளர்ந்திருக்கு. மூக்கும் முழியுமா அவ ஆத்தாளைப் போலவே இருக்கு. புத்தி சாலிப் பொண்ணுன்னு வாத்தியாரம்மாளே சொல்லிட்டாங்க’ என்று சொல்லி அவகைவே சிரித்துக்கொள்வான். கிழவன், வாத்தியாரம்மாள் என்று குறிப்பிடும் ஆரோக்கிய மேரிதான் செல்லம்மாளுக்கு உற்ற துணை, தாயைப்போல. மாதம் தவருமல் சுடலைமாடன் போய் வருவான்; கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு வருவான். அவன் உயிர் வாழ்வதே இந்தப் பெண்ணுக்காகத்தானே! செல்லம்மாள் - இந்த உலகத்தில் இந்தத் தகப்பனை மட்டுமே அறிந்தவளாக, கருத்துடனே படித்துப் பள்ளி இறுதி வகுப்புத் தேறினுள். ஆரோக்கிய மேரியின் யோசனைப்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தாள். அந்தப் படிப்பும் முடிந்துவிடப் போவதாகச் சொன்னுள் மேரி. - மகளுக்கு மணம் முடித்துப் பார்க்க வேண்டுமென்ற நினைவு வந்தது கிழவனுக்கு, மகளுக்கேற்ற மருமகன், அவனது வகையிலேயே இருப்ப தாகப் படவில்லை கிழவனுக்கு. செல்லம்மாளை மிகமிக உயரத்தில் தூக்கி வைத்துவிட்டான் கிழவன். மகளுக்குப் பக்கத்திலே, கிருதா மீசையோடு, பரட்டைத் தலையோடு, முடிச்சு விழுந்த வேர்க்கட்டையாக நின்று பேசுவதற்கு அவனுக்கே நடுக்கம் ஏற்படுமே. மாப்பிள்ளையைப் பலவிடங்களிலும் தேடிய பிறகு, மகளுடைய திருமணப் பிரச்சினை அவனுக்குப் பெரும் குழப்பத்தையே கொடுத்தது. பிறந்த இடத்துக்கு மகளே அழைத்து வந்து, பிணம் எரிக்கும் கூட்டத்தோடு சேர்த்துவிடவும் அவனது மனம் கூசியது. மேரியம்மாளயும் கலந்து பார்க்கலாம் என்ற எண்ணத் துடனேதான் கடந்த முறை ஊருக்குச் சென்ருன். 10
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/143
Appearance