பக்கம்:பிள்ளைக்கலி.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑要9 ஒரு மாதம் கடந்துவிட்டது. அறிந்தவரிடம் போய் உட்கார்த்து, தனது மனக்கவலையைச் சொல்லி, சேமலாபம் விசாரித்துக் கடிதம் எழுதிப் போட்டான் கிழவன். மகளிடமிருந்து வரும் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாற்ற மடைந்தபோது, கிழவனது உடலும் உள்ளமும் சோர்ந்தன. மாரியம்மாளிடம் போய்ச் சேரவேண்டிய நேரம்தான் நெருங்கி வருகிறதோ ? 'சோறு திங்கலையா ?' என்ற பெரிய கருப்பனின் குரல் கிழவனின் மோன நிலையைக் கலைத்தது. நிமிர்ந்து உட்கார்ந்து, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். இடது பக்கத்திலே, சற்றுத் தள்ளி, சாம்பல் மேட்டின் மீது, எருவாட்டிகள் நீளவசமாக அடுக்கப்பட்டிருந்தன. கிழவனது பார்வை இந்தச் சிதையின் மீது தங்கியது. காலேயிலே வந்த பதிவு அதிகாரி வீட்டு இழவு. இளவயதுப் பெண்ணும்! 'நல்லா முட்டுக் கொடுத்து வச்சிருக்கியா ? மேடு உசந் திருக்கு. சரிஞ்சிடப் போகுது. பெரிய இடத்துப் பொல்லாப்பு’’ என்று எச்சரிக்கை செய்தான் கிழவன். பெரிய கருப்பன் மண் குழைக்கப் போய்விட்டான். கிழவனுக்குச் சாப்பாட்டின் மீது கவனம் செல்லவில்லை. ஊர்ப் பாதையின் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டான். இதயத்திலிருந்து கனம் இறங்கவில்லை. உடம்பிலே சூடு பரவி இருந்தது. ஒரு முறை பலமாக இருமி ஓய்ந்தான். டயர் மிதியடி கட்டியங்கூற, நகர சபை மேலதிகாரி, சந்தியாவு வந்து கொண்டிருந்தான். 'வாங்க' என்று வரவேற்புக் கொடுத்துவிட்டு, தனது இருக்கையைக் கீழே மாற்றிக்கொண்டான் கிழவன். என்ன சுடலை - சோலியெல்லாம் தீர்த்திடுச்சா ?’ என்று கேட்டுக் கொண்டே திண்ணையில் அமர்ந்தான் சந்தியாவு. 'ஐயா வீட்டிலே - இந்தப் பெண்ணுக்குக் கொஞ்ச வய சுண்ணு சொன்னங்களே. எப்படிங்க திடீரின்னு நேர்ந்துபோச்சி' என்று கேட்டான் கிழவன்.