பக்கம்:பிள்ளைக்கலி.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I5 0. 'அதெல்லாம் பெரிய இடத்துச் சங்கதி. எத்தனையோ நடக்குது!’ 'நல்லா படிச்ச பெண்ணுமில்லே'. 'ஆமா- படிச்ச பொண்ணுதான். வைராக்கியமா இப்படிச் செய்து போடுச்சி!' என்ருன் சந்தியாவு. ‘எப்படிங்க ?’’ 'இது தன் சாவு இல்லை சுடலை. வேறே இடம்ன இந் நேரம் பிணம் அறுவைக் கொட்டகைக்குப் போயிருக்கணும்.’’ கிழவனுக்கு நெஞ்சு திக்கென்றது. சங்கு சேகண்டியின் முழக்கம் கேட்டது ‘'எதுக்காக இப்படி அநியாயமா செத்துப் போச்சு இந்தப் பொண்ணு' என்று குழந்தைக் குரலில் கேட்டான் கிழவன். சந்தியாவு - திண்ணையிலிருந்து இறங்கிச் செருப்பை மாட்டிக் கொண்டான். 'போன வாரத்திலேதான் இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்தாங்க: இதுக்குப் பிடித்தமில்லே. இப்படி நடத்து போச்சு’’ என்று அவசரத்தை முன்னிட்டுச் சுருக்கமாகவே முடித்தான் சந்தியாவு. கிழவன் எழுந்து நின்ருன். ஊர்வலம் நெருங்கி வந்தது. நாகர்படம் பாடைதான். கிழவன் பரபரப்புடன் பார்த்தான். அங்கே செந்தாமரை மொக்கைப் போன்றவள் - மீளாத நித்திரையிலிருந்தாள். கிழவனது விழிகள் நீரில் மூழ்கின. அவன் ஒதுங்கி நின்ருன். அவளைக் கட்டவிழ்த்துக் கீழே இறக்கிச் சிதையின்மீது கிடத்தி விட்டார்கள். அரும்பிய மொட்டு, மலரும் முன்னல் மண் கொண்டு மூடப் போகிரு.ர்கள். அவளது நெஞ்சின் மீது பின்னி இருந்த உயிரற்ற தளிர்க்கரங்கள் - உள்ளிருந்து பொங்கிவரும் உணர்ச்சி வெள்ளத்தை அடக்க முயலுவது போலிருந்தது. இந்தப் பூவுடலும், இன்னும் சற்று நேரத்தில் புதைந்துவிடும்.