பக்கம்:பிள்ளைக்கலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எதையோ பேசினர் டாக்டர் மு. வரதராசனுர் வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். இன்று சமய உலகிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட முடியும்’ என்ற நம்பிக்கையோடு தெருவில் நடந் தேன். என் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் வந்திருக்கும் என்று தற்பெருமையாக எண்ணிக்கொண்டே பஸ் நிலையத்தை அடைந் தேன். 'உனக்கு வாழ்க்கைப்பட்டு' என்று தொடங்கி விம்மிய குரலேக் கேட்டுத் திரும்பினேன். குழிந்த கன்னங்களையும் அழுக் கேறிய ஆடையையும் கண்டேன். பளபள என்று மின்னும் கற்களோ உலோகமோ காதிலும் இல்லை; கழுத்திலும் இல்லை; கையிலும் இல்லை. அந்தப் பெண்ணுருவைப் பார்த்ததும் பார்க் காததுமாய், நின்றிருந்த ஒருவர் காக்கி உடை உடுத்தியிருந்தார். அவருடைய கண்களிலும் வறுமை இருந்தது; பேச்சிலும் அந்த வறுமை இருந்தது. பேச்சில் வறுமை என்ருல் குறைந்த அளவான பேச்சு என்று எண்ண வேண்டா. வறுமையால் தாழ்வுற்றுப் பிறரையும் தாழ்வுறச் செய்யும் போக்கு அந்தப் பேச்சில் இருந்தது; அநாக ரிகம் அந்தப் பேச்சில் இருந்தது; ஒரு வகைப் போக்கிரித் தன்மை அந்தப் பேச்சில் இருந்தது. இவை எல்லாம் வறுமையின் விளைவுகள் அல்லவா? இப்படிப்பட்ட வறுமை அவருடைய பேச்சில் இருந்தது. ஐந்து வயதுள்ள பையன் அந்தத் தாயின் முந்தானேயைப் பற்றிக்கொண்டே நின்ருன்; அவனுடைய பார்வை தாயின் முகத்துக்கும் தந்தையின் முகத்துக்கும் தாவித் தாவிப் பறந்து கொண்டிருந்தது. தாய்க்கும் தந்தைக்கும் இடையே மூன்று வயதுள்ள பெண் குழந்தை இங்கும் அங்கும் திரும்பிக் கொண் டிருந்தது. "இங்கே யார் உன்னே வரச் சொன்னது?' 'எனக்கு வருவதற்கு வழி தெரியும். 'உன் துன்பம் உனக்கு, என் தொல்லை எனக்கு, 'நான் நூறு நூருகச் சம்பாதிக்கிறேன: 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/15&oldid=1395631" இலிருந்து மீள்விக்கப்பட்டது