பக்கம்:பிள்ளைக்கலி.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அத்திப் பூ புலவர் தாமரைக்கண்ணன் 'மிகுந்த அன்புடனும் வணக்கத்துடனும் கேட்டுக்கொள் கிருேம். தாங்கள் தடை சொல்லாமல் அவசியம் இதற்கு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது எங்கள் நான்கு பேரு டைய எண்ணமும் ஆவலும் மட்டும் அல்ல, இந்த நாட்டு மக்களின் இதய ஆர்வமும் கூட...... * > நக்கீரர் கழகத்தின் செயலாளரும், அவருடைய நண்பர்களும் பெரும்புலவர் பரிமேலழகரிடம் பாகாக உருகி, தேளுகக் குழைந்தனர். சரி...... இவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. வைத்துக் கொள்ளுங்கள்.' பரிமேலழகருக்கு அறுபது ஆண்டுகள் நிறைவெய்தின. அதனை யொட்டி மணி விழா நடத்தவும், அவருக்குத் 'தத்துவ மேதை” என்ற பட்டம் தருவதற்கும் நக்கீரர் கழகம் ஏற்பாடு செய்ய முன் வந்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதற்குத்தான் அவர் அரை மனசுடன் ஒப்புதல் அளித்தார். விழாக் குழுவினரின் உச்சி குளிர்ந்தது. செயலாளர் இரு கரம் கூப்பிப் பணிவுடன், 'விழாவன்று தங்கள் வாழ்க்கைக் குறிப்பாக நூல் ஒன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். சிறிய வயதில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அநுபவம் ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா ?” என்று கேட்டார். சிறிய வயதிலா......? பரிமேலழகர் சிந்தித்தார். ஏழெட்டு வயது வரை அவர் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிகள் எதுவும் நடந்ததாக அவருக்குக் கவனம் இல்லை. அதன் பிறகு... சூளும்பேடு என்ற கிராமத்தில் ஆறு, ஏழு, எட்டு, வகுப்புக் கள் படித்துக் கொண்டிருந்தபோது, ஐந்தடி விட்டம் உள்ள பாதாளக் கிணறுகளில் கரை மீதிருந்து தலை கீழாகக் குதித்து ஆடின நாள்களும், ஆடு மாடு மேய்க்கும் நாகரிகமற்ற சிறுவர் களுடன் சேர்ந்துகொண்டு கோலியும் புள்ளும் பந்தும் ஆடிய