பக்கம்:பிள்ளைக்கலி.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏等乳 நாள்களும், இராக் காலங்களில் பாம்புகள் நிறைந்த புதர்களின் உள்ளே நுழைந்து பனம் பழம் பொறுக்கிய சம்பவங்களும், நிலவு காயும்போது நடு ஜாமம் வரை "சடுகுடு ஆடிவிட்டுத் திருடனைப் போலப் பதுங்கிப் பதுங்கி வந்து திண்ணையிலே படுத்த நிகழ்ச்சிகளும்...... பரிமேலழகருக்குத் தமது இளவயது நினைவுகள் அடுக்கடுக்காக அணியணியாக வந்தன. சிறிது நேர மெளனத் திற்குப் பிறகு அவர் பேசலானர். 'அந்த நிகழ்ச்சி எனக்கு நன்ருக நினைவு இருக்கிறது. அப்போது எனக்கு வயது பதினென்று. ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்...... 3 ל பரிமேலழகரின் ஆழ்ந்த சிந்தனையையும், அவருடைய நுண் னிய பேச்சினையும் கண்ட கலைப்பித்தன், தன் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு அவர் சொல்வதைக் குறித்துக் கொள்ளத் தயாரானர். பரிமேலழகர் சொல்லிக் கொண்டே சென்ருர், 'பள்ளிக்கும் நாங்கள் குடியிருந்த ஊருக்கும் இடையில் ஒரு மைல் தூரம். ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது, விளக்கு வைக்கும் நேரமாகி விட்டது. அப்பா வேலையின் மேல் வெளியூருக்குச் சென்றிருந்தார். அவருக்கு ஆசிரியர் பணி. நான் முகத்தையும் கை கால்களையும் அலம்பிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. ஆறு வயது நிரம்பிய என் அன்புத் தங்கை பாயின் மீது கிடத்தப்பட்டிருந்தாள். அவளுடைய முகத்திற்கு நேராக, சற்றுத் தள்ளிக் கைவிளக்கு - காமாட்சி யம்மன் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அம்மா, கண்களில் நீர் மல்க, தங்கையின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தார்கள். நான் அமைதியுடன், புத்தகப் பையைச் சுவரிலிருந்த ஆணியில் மாட்டிவிட்டுத் தங்கையின் அருகில் சென்று அமர்ந்தேன். வெய்யிலில் வதங்கிய கொடிபோலத் துவண்டு போயிருந்த அவளுடைய பிஞ்சுக் கையைத் தொட்டுப் பார்த்தேன். நெருப்பாகக் கொதித்தது. “ ‘குழந்தைக்கு வாயைத் திறந்துகூடப் பேசமுடியவில்லையே: காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது; உங்கள் அப்பாவும் வீட்டில் இல்லையே... நான் என்னடா கண்ணு செய்வேன்' என்று வாயில் சேலையின் தலைப்பை அடைத்துக் கொண்டு அம்மா குமுறி ஞர்கள். ஒலி கேட்டு, தொட்டிலில் இருந்த என் ஒரு வயதுத் தங்கை அழுதாள். அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டே எழுந்து சென்று தொட்டிலை ஆட்டிஞர்கள்.