உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54 'மெல்லிய காற்றில் அசைந்த கைவிளக்கின் பிழம்பையும், என் தங்கையின் முகத்தையும் நான் தீவிரமான சிந்தனையுடன் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சிந்தனை கட்டுக் கடங்காத வெறியுடன் தாறுமாருக ஒடிக் கொண்டிருந்தது. 'இந்த விளக்கு அணைந்துவிட்டால் ? அதைப் போலவே, இதோ காய்ச்சலால் துவண்டு கிடக்கும் நம் தங்கையும் இறந்து விட்டால்......? என் தங்கைமீது நான் அளவு கடந்த அன்பும் உயிரும் வைத்திருந்தேன். அப்படியிருந்தும், அது ஏனே, அவள் இறந்து விட்டால்...... என்ற ஓர் தீய எண்ணம். அதை நினைக் கும்போது என் நெஞ்சம் நடுங்கியது. உடல் பதறியது. 'தங்கை இறந்துவிட்டால்... ? - என் தலை சுற்றியது. அவள் இறந்துவிட்டதைப் போலவே ஒரு பிரேமை...... வேதனை...... இனந் தெரியாத வேதனை......! திடீரென்று எனக்கு ஒரு எண்ணம். "அவள் இறந்தால் என்ன? நான் ஏன் அதற்காக அழ வேண்டும் ? சரி. நாம்தான் அழவேண்டாம் என்று தெரிகிறதே, அதை நினைக்கும்போதே ஏன் இப்போது அழுது கொண்டிருக்கிருேம்? நம் கண்களில் ஏன் கண்ணிர் வழிந்து கொண்டிருக்கிறது ?" 'பிடிபடாத எண்ணங்கள், கொந்தளித்துக் கொண்டிருந்த என் மூளையில் மேலும் பல புரியாத குழப்பங்கள் உருவாகிக் கலங்கிக் கொண்டிருந்தன ; ஏதோ ஒரு ஆவல் என்னே உந்திற்று. விளக்கு சுடும் என்பதை உணர்ந்திருந்தும் என் ஆள்காட்டி விரலே விளக்கின் நெருப்பில் நீட்டினேன். அடுத்த கணம்......மூளையில் தாக்கியதைப் போல “சுரீர்” என்று நெருப்பின் சுடர் உறைக்கவே, விரலை இழுத்துக் கொண்டேன். 'ஜிவ் ஜிவ்' என்று வலித்த வலது கை விரலை இடது கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு தங்கையின் மலர் முகத்தைப் பார்த்தேன். அவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். என்னுடைய வலியின் வேதனையை யும், வேதனையற்ற அமைதியான என் தங்கையின் உறக்கத்தை யும் ஒப்பிட்டுப் பார்த்தவுடனே, குழம்பிக் கொண்டிருந்த என் சிந்தனைக்கு விடை கிடைத்துவிட்டது. 'என் மூளை தீவிரமாக வேலை செய்தது. புரியாத தத்துவங் கள் எல்லாம் ஒரளவு புரிய ஆரம்பித்தன. ஆம்...... நான் நெருப்பில் விரலைச் சுட்டுக்கொண்டு வேதனை தாளாது துடித்துக் கொண்டி ருக்கிறேன். என் உடலாகவும் உயிராகவும் மதிக்கும் என் தங்கையை அந்த என் வேதனை சென்று தாக்கவில்லை. அவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிருள். காரணம்...... ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/152&oldid=1395771" இலிருந்து மீள்விக்கப்பட்டது