பக்கம்:பிள்ளைக்கலி.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


பொன்ஞர்மேனி... நச்செள்ளை... வெள்ளிவீதி' போன்ற இலக்கிய மணம் கமழும் பெயராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அஞ்சுகமோ மூச் சென்று ஒரே பேச்சில் அதை அடக்கிவிட்டார்கள். பரிமேலழகருடைய வீட்டிற்குப் பின்புறம்தான் பக்கத்து வீதியில் ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு செய்து பெரிய பந்தல் போட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். சற்று தேரம் சன்னல் வழியாக நின்று அதைக் கவனித்த அஞ்சுகம், முகத்தில் களிப்புப் பொங்கத் தம் கணவர் அறைக்குள் நுழைந்தார்கள். 'உலகில் பிறந்த எல்லா மனித ஜென்மங்களும் ஒன்றுதான். ஆனல் ஒரே ஒரு மனித உருவத்தைப் போற்ற இத்தனை மனித உடல்கள் இரவு பகலாகப் பந்தல் போட்டுப் பணம் செலவழித்து வீண் அலைச்சல் படுவது ஏன் ? என்று சிந்தித்துக் கொண்டிருந்த பரிமேலழகர் தம் மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். "ஆமாம், இன்று நீ கிராமத்திற்குச் செல்லவேண்டும் என்ருயே ?' என்ருர். அப்போதுதான் கவனம் வந்தவர்களாய், "ஆமாம், ஆமாம்! மறந்தே போய்விட்டேன். நீங்கள் சீக்கிரம் தயாராகுங்கள். முதலில் நம் குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டுத்தான் பிறகு நாம் நாளைக்கு விழாவுக்கே போகவேண்டும். எல்லாம் அவன் அருளால்தான் வந்தது! கண்ணகி எங்கே ? கண்ணகி, கண்ணகி: காரை சீக்கிரம் எடுக்கச் சொல்லுங்க!' என்று சொல்லிக் கொண்டே பரபரப்புடன் வெளியே வந்தார்கள், அஞ்சுகம். - அடுத்த அரைமணி நேரத்தில் கார் கிராமத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. - மாலை ஆறு மணிக்கு செம்மநேரி ஐயரைப்பன் கோயிலில் பூசை ஆரம்பமாயிற்று. ஏரிக்கரையின் கோடியில் பனைமரங்களும் ஆத்தி மரங்களும் அடர்த்து வளர்ந்திகுந்த தோப்பின் இடையில் அமைந்திருந்த அந்தக் கோயிலின் சுற்றுச் சூழ்நிலை, பரிமேலழகருக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. . . . . அபிஷேகம் முடிந்தபோது மணி எட்டு. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதபடி எங்கும் காரிருள் கவிந்து கொண்