பக்கம்:பிள்ளைக்கலி.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 53 டிருந்தது. அஞ்சுகம் பயபக்தியுடன் கரம் கூப்பி, தலே தாழ்த்தி, இறைவனே வணங்கிக் கொண்டிருந்தார்கள். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளையும், ஒன்று சேர்த்து முன் பக்கம் தொங்க விட்டபடி பரிமேலழகர் நின்றிருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றிருந்த சிறுமி கண்ணகி தன் தந்தையின் கையை மெதுவாகச் சீண்டினள். பரிமேலழகர் திரும்பி, 'என்னம்மா...' என்ருர். அதோ பார், அப்பா' என்று அருகில் இருந்த ஆத்தி மரங்களைச் சுட்டிக் காட்டினுள், கண்ணகி. அவற்றைப் பார்த்த பரிமேலழகரின் கண்கள், வியப்பாலும் மகிழ்ச்சியாலும் மலர்ந்தன. அந்தக் கரிய இருளில் இருண்ட குன்றுகளைப் போன்று காட்சியளித்தன, ஆத்தி மரங்கள். ஒளி மிகுந்த நட்சத்திரங்களைப் பறித்து வந்து கொட்டிற்ைபோல அந்த மரங்களைச் சூழ்ந்திருந்தன மின்மினிப் பூச்சிகள். ஒளியே சிறிதும் இல்லாமல் இருள் கவிந்திருந்த அந்த நேரத்தில் மரங்களில் இலக்கு ஒரு பூச்சியாக இலட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் சூழ்ந்து, அடிக்கடி ஒளிச் சிதறல் உண்டாக்கிக் கொண்டிருந்தன. கரங்கள் முழுதும் ஒளிர்ந்த ஒளிப்புள்ளிகள், அந்த மரங்கள் தாம் ஏராளமான நட்சத்திரப் பூக்களைப் பூத்திருப்பதைப்போல இருந்தன. இருட் டறையில் பட்டை தீட்டிய வைரக்கற்களைக் கொட்டிஞற்போலக் கண்ணைப் பறித்த அந்த இயற்கைக் காட்சி, பரிமேலழகரையும், கண்ணகியையும் மெய்ம்மறக்கச் செய்தது. விட்டிற்கு வந்ததும் இலேசான, இரவு உணவை முடித்துக் கொண்டு, அஞ்சுகம் தம் அறைக்குச் சென்று படுத்துக்கொண் டார்கள். கண்ணகிக்கு உறக்கம் வரவில்லை. மெல்லத் தன் அப்பா வின் அறைக்குள் சென்ருள். அவள் சென்ற சமயத்தில், தாம் கோயிலில் கண்ட அந்த மின்மினிப்பூச்சிகளின் அழகிய காட்சியை வர்ணித்து ஏதோ கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார், பரிமேலழகர். t; , 'அப்பா......! - 'வாம்மா, கண்ணகி......! பேணுவை மேசைமீது வைத்து விட்டு, மகளே அனைத்து அருகில் உட்காரச் செய்தார். அப்பா.....அந்த மின்மினம்பூச்சிங்க வெளிச்சம் போட்டுப் பறந்தது கண் சிமிட்டி நம்மைக் கூப்பிடுவதைப்போல இல்லேப்பா 2” - -