பக்கம்:பிள்ளைக்கலி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 'நானே வேளைக்குக் காப்பி இல்லாமல், காப்பிக்குக் காசு இல்லா மல் அலைகிறேன்,' 'என்னை என்ன செய்யச் சொல்கிருய் : இங்கெல்லாம் வரக் கூடாது வந்து வாய் திறக்கவும் கூடாது' இந்த வாக்கியங்களே நான் அவருடைய பேச்சிலிருந்து நாகரிக மாகப் பொறுக்கி எடுக்கக்கூடிய வாக்கியங்கள். இவற்றைத் தொலைவிலிருந்து கேட்டபோதே என் மனம் இளகிவிட்டது. கசிந்து உருகத் தொடங்கிவிட்டது. இவர்களின் பேச்சைக் கேட்டு நின்ருல், மானம் என்ற ஒன்று இவர்களின் நெஞ்சைப் பிளக்குமே என்று அஞ்சி, அப்பால் நகர்த்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தேன். அவர்கள் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன். இருவரும் பேசியது கேட்கவில்லை. கை நீட்டி நீட்டி அசைத்த அசைவிலிருந்து பேச்சில் வேகம் மிகுந்து விட்டதோ என்று எண்ணினேன். பஸ் புறப்படுவதற்கான வீளை ஊதப்பட்டது. அதைக் கேட்டதும், அந்த ஆள் அங்கிருந்து மடமட என்று நடந்து வரத் தொடங்கினர். தலை மட்டும் குனிந்தபடியே நடந்துவந்தார். 'அப்பா அப்பா என்ற குரல் என் காது வரை எட்டியது. பையனே பெண்ணுே என்று உற்றுக் கேட்டேன். பையன் சிறிது தூரம் பின்தொடர்ந்து வந்து திரும்பி விட்டான். தாயை நெருங்கி முந்தானையைப் பிடிக்க முயன்ருன். ஆளுல் என்ன காரணத்தாலோ அந்தத் தாய் அவனுடைய கன்னத்தில் இடித் தாள்; தலையைத் தட்டினள். பையன் அழுதுகொண்டே நின்ருன். அந்த ஆளோ பஸ்ளை நெருங்கி வந்து விட்டார். அந்தச் சிறு பெண் குறுகுறு என்று தொடர்ந்து ஓடிவந்து கொண்டே இருந்தாள். 'போ, வராதே. அம்மாகிட்டே போ, அடிப்பேன் போ' என்ருர் அவர். அந்த இளம் பெண்ணுே, 'அப்பா காலணு, அப்பா காலணு என்று விடாமல் கேட்டுக் கெஞ்சிள்ை. அவர் தயங்காமல் பஸ்ஸின் முன்புறக் கதவைத் திறந்த போது தான். நான் ஏறிய வண்டியின் டிரைவரே அவர் என்பதை அறிந்தேன். சிறுமி-மூன்று வயதுள்ள குழந்தை - இளங் கைகளை நீட்டிக் கேட்டுக்கொண்டே நின்ருள். பஸ் புறப்படுவதற்கு முன்னே அவளுடைய கையில் ஒரு காலணு விழுந்தது. அதைப் பெற்றுக் கொண்டதும் அவள் துள்ளித் துள்ளி அசைந்து ஒடு வதைக் கண்டேன்.