பக்கம்:பிள்ளைக்கலி.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63 றனர். அருகில் அமர்ந்திருந்த கண்ணகியைப் பார்க்கும் போதெல்லாம், இவ்வளவு சிறப்புக்கும் நீர் பொருத்தமானவர் இல்லை' என்று அவள் நினைத்துக்கொண்டு அவரைப் பார்ப்பதைப் போல அவருக்குப் பட்டது. ஊர்வலம் முடிந்து அனைவரும் பந்தலுக்கு வந்தனர். மேடைமீது உயரிய ஆசனங்களில் மூவரும் அமர்த்தப் பட்டனர். எதிரில் ஆயிரக் கணக்கான மக்கள் - நூற்றுக் கணக்கான புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்...... ஆகியோர். பரிமேலழகரின் சிறந்த தமிழ்த்தொண்டைப்பற்றியும், மன வியல் உயிரியல் ஆராய்ச்சிநூல்களின் சிறப்பைப்பற்றியும் மணிக் கணக்கில் பேசி, தங்கள் தங்கள் பாராட்டுதல்களைப் பலரும் தெரி வித்துக்கொண்டனர். தலைவர், பரிமேலழகரின் தனித்திறமை யையும் தகை சான்ற அறிவையும் புகழ்ந்து பாராட்டி, 'இதே மணிவிழாவில் அத்தகைய சான்ருேருக்கு தத்துவமேதை” என்ற பட்டத்தை உங்கள் அனைவரின் சார்பாக அளித்து, இந்தப் பொன்னுடையைப் போர்த்துகிறேன்' என்று விண்ணதிரும் கையொலியுடன் முடித்தார். அந்தச் சிறப்புப்பட்டத்தையும் பொன்குடையையும் ஏற்றுக் கொள்வதற்கு எழுத்து நின்ற பரிமேலழகர், திடீரென்று என்ன நினைத்துக் கொண்டாரோ, ஒலிபெருக்கியின் முன் வந்து நின்று, 'நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் என்னைப் போற்றிப் புகழ்ந்து பொன்னுடை போர்த்துவதையோ, சிறப்புப் பட்டம் கொடுப்பதையோ ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை. நான் எல்லாம் தெரிந்தவன் அல்லன். எனக்குத் தெரியாதவையும் இந்த உலகில் எவ்வளவோ இருக்கின்றன. இன்று பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியோர்கள் வரை-படிக்கத்தெரிந்தவர்கள் முதல் படிக்கத்தெரியாதவர்கள் வரை உள்ள எல்லோருமே ஞானமுள்ளவர்கள்தாம். அனைவரும் ஞானிகள்தாம். ஞானத்தின் சுடர் உலகில்உள்ள எல்லா உயிர்களின் உள்ளத்திலும் எரிந்துகொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அழியப்போகும் பல உடல்கள் ஒன்று சேர்ந்து ஓடி ஆடி வேலை செய்து, அழியப்போகும் என்னுடைய உடலுக்குத் தனிப்பட்ட மரியாதை கொடுத்துச் சிறப்பளித்து ஊர்வலமாக அழைத்து வந்ததும் - இப்போது என்னை மட்டும் உயர்த்தி வைத்துப் பேசு வதும் - மணிவிழா நடத்துவதும் வெறும் நாடகமே. நால் தினமும் உண்பது உறங்குவது போன்ற சாதாரண நிகழ்ச்சிதான் இந்த மணிவிழா ஏற்பாடு என்றுதான் எனக்குச் சொல்லத்