பஸ் புறப்பட்டது. இந்த இளங் குழந்தையையும் அந்தத் தாயின் கை தாக்குமோ என்று அஞ்சினேன். டிரைவராக முன்னே இருந்த அந்த ஆளேயும் பார்த்தேன். ஆணுல், என் மனம்மட்டும் கந்தல் பாவாடையோடு ஒடிய அந்தப் பெண்ணே யும் மறக்கவில்லை; தாயின் கையில்ை தட்டும் இடிப்பும் பெற்றும் அவளுடைய முகத்தையே பார்த்து அழுத அந்தப் பையனையும் மதக்கவில்லே. என் பின்புறத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் மூன்று நான்கு வயதுள்ள குழந்தைகள் பஸ் நிலையத்துக்கு வந்து காலணு கேட்டுப் பிச்சை எடுக்கலாமா ? மற்ற நாட்டில் இப்படி நடக்குமா ?” என்று பக்கத்தில் உள்ளவரிடம் சொன்னர். இதைக் கேட்டவர், 'ரயிலிலும் இதே தொந்தரவு. ஐந்தாறு வயதுப் பையன்கள் எல்லாம் பாட்டுப் பாடிக் காசு கேட்கிருர்கள்' என்ருர். சின்ன வயதிலேயே பீடி பிடிக்கக் கற்றுக் கொண்டார்கள்; அதற்குக் காசு வேண்டாவா ? என்ருர் மற்ருெருவர். பீடிக்குக் காசு வேண்டுமானல், மூட்டைத் தூக்கிக் கூலி வாங்குவதுதானே? அதற்குப் பதில் பிச்சை எடுக்கலாமா?’ என்ருர் பருமளுக இருந்த இன்னொருவர். 'சின்னப் பையன்களை மூட்டை துரக்க விட லாமா ? அதைக் கண்ணுல் பார்க்கலாமா ? அப்படி ரஷ்யாவில் விடுவார்களா ? என்ருர் கல்லூரி மாணவர் ஒருவர். இந்தச் சொற்கள் டிரைவர் காதில் விழுந்திருந்தால் நன்முக இருந்திருக்கும். ஆனல் பஸ் ஒலி அதற்கு இடம் தருமா ? அந்தப் பெண் குழந்தை பிச்சை எடுப்பதாக எண்ணி விட்டார்களோ என்று வருந்தினேன். யாரை நோவது ? வீட்டில் கண்டு கொஞ்சி மகிழாமல், வழியில் கண்டு கெஞ்சி அழவைத்த தந்தையை நோவதா? மானத்தோடு வீட்டில் அடங்கி மடியாமல் கணவனைத் தேடி வெளியே வந்து போராடிய தாயை நோவதா? மனம் வரவில்லே. அந்தப் பையனையும் நினைந்தேன். ரயிலில் பாடுவது, பீடி பிடித்துத் திரிவது, மூட்டை துர்க்குவது என்றெல்லாம் உடன் இருந்தவர்கள் சொன்னபோது, அந்தப் பையனுடைய எதிர் காலத்தைச் சோதிட முறையாகக் கூறுவதுபோல் தோன்றியது. அந்தத் தாய் டிரைவருடைய மனைவிதான மனைவியாளு; அவரைத் தேடி வரவேண்டிய கார்ணம் இல்லையே? ஒரு வைப்பாட்டியோ ? வைப்பாட்டியானல் முதலில்: பிறகு குறைந்த காரணம் என்னவோ? என்று
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/17
Appearance