பக்கம்:பிள்ளைக்கலி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I களின் மேல் குறை இல்லை என்று எண்ண வேண்டும். குறை யுடைய சமூக அரசியல் அமைப்பே காரணம் என்று எண்ண வேண்டும். பொருள் வேட்டையற்ற சமுதாயத்தை அமைப்பதே கடமை என்று எண்ண வேண்டும். முரடர்களைக் கண்டாலும், ஒழுக்கம் கெட்டவர்களைக் கண்டாலும், அன்பற்றவர்களைக் கண் டாலும், அறிவற்றவர்களைக் கண்டாலும், திக்கற்றவர்களைக் கண் டாலும் எவன் இப்படி எண்ணுகிருனே, அவன்தான் மெய் யுணர்வு பெற்றவன். அவன்தான் உண்மை உணர்ந்த ஞானி. மற்றவர்கள் எல்லாரும் திண்ணை வேதாந்தம் பேசுகிறவர்களே' என்று பேசி முடித்தேன். தலைவர் மோதிரத்தையும் சரிகை மேலாடையையும் மெல்ல ஒழுங்குபடுத்திக் கொண்டார். ஒரு கனைப்புக் கனைத்தார். முடி வுரை சொல்லத் தொடங்கினர். அப்போது அவருடைய உற வினர் ஒருவர் அவசரமாக அவரைத் தேடிக் கொண்டு வந்தார். தலைவருடைய தமக்கை மகள் திடீரென்று ஆபத்தான நிலை அடைந்து மருத்துவ நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாகச் செய்தி வந்தது. தலைவர் விரைந்து கூட்டத்தை முடித்தார். கவலையோடு, சுருக்கமாக, 'சொற்பொழிவாளர் எடுத்த பொருளை விட்டுவிட்டு எதை எதையோ பேசினர்' என்று ஒரு வாக்கியம் குத்தலாகச் சொல்லி முடித்தார். கூட்டம் முடிந்து நான் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வழியில் ஒரு தெருவின் மூலையில் சிறு கூட்டம் இருந்தது. நின் றேன். காரணம் தெரிந்துகொள்ள விரும்பினேன். யாரோ ஒருத்தி நஞ்சு குடித்துக் குற்றுயிராய் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொன்னர்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஆமாம், அந்த டிரைவர்க்கு இன்னம் யாரும் தெரிவிக்க வில்லையா?’ என்று கேட்டார். 'அவனைப் போலீசார் விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிரு.ர்களாம்’ என்ருர் மற்ருெருவர். 'அவன் பாவி. அந்தப் பெண்மேல் குற்றம் சொன்னல் கண் அவிந்துபோகும். கணவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல் இப்படிச் செய்துகொண்டிருப்பாள். அவளுடைய தாய்மாமன் ஒருவர் இருக்கிருர். நல்ல பணக்காரர். படித்தவர். வேதாந்தி’ என ஒருவர் சொல்லிக் கொண்டே நடந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/19&oldid=1395635" இலிருந்து மீள்விக்கப்பட்டது