3. மயிலைக் காளே
- 器獻器*
கிருஷ்ணக் கோனன் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னல் அதிலிருந்து பல தவறுகள் நேரிடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரண மல்லவா ? இருபது வருஷத்திற்கு முன்னல், கிருஷ்ணன் இந்தப் பூமியில் பிறந்தான். அதன் பிறகு அவனுடைய அனுமதியைக் கேளாமலே வயது ஆகிக் கொண்டு வந்தது. இருபது பிராயம் நிரம்பும் காலம் சமீபித்தது. நேற்று அவனுடைய மயிலேக் காளே கெட்டுப்போய் இன்று அதை அவன் தேடி அலேயும்படி நேரிட்டதற்குக் காரணம் என்ன வென்று நினைக்கிறீர்கள் ? என்னுடைய அபிப்பிராயம், அவ னுடைய பிராயத்தான் அதற்குக் காரணம் என்பது. ஒரு வேளை நீங்கள் வித்தியாசமாய் நினைக்கக்கூடும். அவன் மாட்டைக் கவனிக்க வேண்டிய நேரத்தில் பூங்கொடியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம் என்று சொல்லக்கூடும். உண்மைதான். ஆனல், அதற்கும் காரணம் அவனுடைய பிரா யந்தான் என்று நான் கருதுகிறேன். - மாசி மாதம்; அறுவடை போராடியெல்லாம் ஆகிவிட்டது. இந்நாட்களில் கிருஷ்ணன் மத்தியான்னம் சாப்பிட்ட பிறகு மாடு களை ஒட்டிக் கொண்டு அவைகளை மேயவிடுவதற்காகப் போவது வழக்கம். சாதாரணமாய் அறுவடையான வயல்களிலே மாடுகள் மேயும். லயன்கரை மேஸ்திரி எவனும் வரமாட்டானென்று தோன்றுகிற சமயத்தில், கிருஷ்ணன், மாடுகளே இராஜன் வாய்க் காலுக்கு அப்பால் ஒட்டுவான். கொள்ளிடத்துக்கும், இராஜன் வாய்க்காலுக்கும் மத்தியிலுள்ள அடர்ந்த காட்டில் மாடுகள் மேயும், பொழுது சாய்வதற்குள் திரும்ப ஒட்டிக்கொண்டு வந்து விடுவான். நன்ருக இருட்டுவதற்குமுன் வீட்டுக்கு வராவிட் டால், அவனுடைய தாயார் ரொம்பவும் கவலைப்படுவாள். நேற்று வழக்கம்போல் அவன் மாடுகளை வயல்களில் மேயவிட்டு, இராஜன் வாய்க்காவின் கரையில் உட்கார்ந் திருந்தான். பூங்கொடியின்மேல் ஞாபகம் போயிற்று. அவளைப் பார்த்தே ஒரு மாதம் இருக்கும். நெருங்கிப் பேசி எத்தனையோ ாகிவி : *. * :గు". ' స్కో அவள் வெளியிலேயே விட்டது. இப்போதெல்