பக்கம்:பிள்ளைக்கலி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器3 வருவது இல்லை. பாவம்! நோயாளி மாமனுக்குப் பணிவிடை செய்துகொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிருள். பெருமாள் கோளுன் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிச் செத்தும் சாகாமலும் கிடப்பான் ? அவன் செத்துப் போனல் அப்புறம் பூங்கொடியின் கதி என்ன ? அவள் பிறகு அந்த வீட்டில் இருக்க முடியுமா ? பெருமாள் கோனன் பெண்டாட்டி பெரிய பிசாசு அல்லவா! அவளிடம் பூங்கொடி என்ன பாடுபடு வாள் ? இப்போது-மாமன் இருக்கும்போதே, இந்தப் பாடு படுத்துகிருளே ? என்னிவெல்லாமோ யோசித்த பின்னர், கடைசியாக அவன் மனம் கல்யாணத்தில் வந்து நின்றது. ஏழைப் பெண்தான்; மாமன் செத்துவிட்டால் நாதியற்றவளாகிவிடுவாள். இக்காரணத்தினுல் தன் தாயார் ஒரு வேளை தடை சொன் ஞலும் சொல்லலாம். ஆளுல் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தாயார் மறுத்துச் சொன்னல் கூடக் கேட்க முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று...... இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், மயிலைக் காளை இராஜன் வாய்க்காலில் இறங்கி அக்கரை போவதை அவன் கண்கள் பார்த்தன; மூளைக்குச் செய்தியும் அனுப்பின. ஆனல், அந்தச் சமயம் அவன் மூளை வேறு முக்கிய விஷயத்தில் ஈடுபட்டிருந்தபடியால், அச் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. வேருெரு சமயமாயிருந்தால், 'பொழுது போகிற சமயம்; இப்போது மயிலைக் காளையை அக்கரை போகவிடக்கூடாது, காட்டில் புகுந்துவிட்டால் தேடுவதுகஷ்டம்’ என்று சொல்லி, உடனே ஒடிச்சென்று மறித்து ஒட்டியிருப்பான். 'த்தா! த்தா! ஏ மயிலை' என்று இரண்டு அதட்டல் போட்டால் கூட அநேகமாய் அது திரும்பியிருக்கும். இப்போதோ பார்த்துக் கொண்டே சும்மா இருந்துவிட்டான். கடைசியில், மயிலைக் காளை இல்லாமலே இரவு வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அதன் பலகைத்தான் கிருஷ்ணன், இன்று ஊரெல்லாம் மாசி மகத்துக்காக ஒமாம்புலியூருக்குப் போயிருக்க, தான் மாத்திரம் காட்டிலே அலேந்து கொண்டிருக்க நேர்ந்தது. அன்று காலையில் எழுந்ததும், அவன் பச்சை மிளகாயும், உப்பும் கடித்துக்கொண்டு பழைய சோறு சாப்பிட்டு விட்டுக் கையில் புல்லாங்குழலுடன் கிளம்பினன். கிருஷ்ணன் புல்லாங் குழல் வாசித்தால் வெகு அபூர்வமாயிருக்கும். நல்ல சங்கீதம் கேட்டுப் பண்பட்ட காதுகளையுடையோரை அவனுடைய வேணு கானம் துரத்தித் துரத்தி அடிக்கும் வல்லமையுடையது. ஆனல்,