உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


சலசலவென்று சப்தம் கேட்டது. கிருஷ்ணன் சப்தம் வந்த இடத்தை நோக்கினன். யாருடைய நினைவை ஒழிக்க வேண்டுமென்று தீவிரமாகத் தீர்மானம் செய்து கொண்டிருந் தானே, அந்தப் பெண்ணின் உருவம் புதர்களை நீக்கிக் கொண்டு வெளிவந்தது. கிருஷ்ணனைப் பார்த்ததும், திருதிருவென்று விழித்தது. கிருஷ்ணன் - வேகமாய் நடந்து கொண்டிருந்த கிருஷ்ணன் -நின்றுவிட்டான். இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்ருர்கள். பிறகு சமீபத்தில் வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணை சாதாரணமாய் இத்தகைய சந்தர்ப்பங்களில் காதலர்களின் சம்பாஷணை எப்படியிருக்குமோ அப்படியில்லே என்பதை வெட்கத்துடன் தெரிவித்துக்கொள் கிறேன். கொஞ்ச நேரம் சும்மா நின்றபின், கிருஷ்ணன், 'நீ மகத் துக்குப் போகலேயா ?' என்று கேட்டான். х 'நீ போகலையா ?” 'நான்தான் இங்கே இருக்கேனே; எப்படிப் போயிருப் பேன்.?’’ - 'நானுந்தான் இங்கே இருக்கேனே எப்படிப் போயிருப் பேன் ?” 'நீ என்ன சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா?” என்று சிரித்துக்கொண்டே கிருஷ்ணன் கேட்டான். பூங்கொடி பெருமூச்செறிந்தாள். "கிளியாயிருந்தால் எவ்வளவோ நல்லாயிருக்குமே ? ஒரு கஷ்டமுமில்லாமல் காட்டிலே சுகமாய் பறந்து திரிந்து கொண்டிருக்கலாமே? என்ருள். கிருஷ்ணனுக்கு அவனே அறியாமல் அசட்டுத்தனமாகப் பேச வந்தது. 'நாம் இரண்டு பேரும் கிளியாய்ப் போய்விடலாம்” என்ருன். பிறகு, ஏ .ே தா நினைத்துக்கொண்டவன்போல், "ஆமாம்! பூங்கொடி நீ ஏன் முன்னைப் போலெல்லாம் வெளியி லேயே வருவதில்லை ? உன்னைக் காணவே முடிகிறதில்லையே?’ என்று கேட்டான். - "உனக்குத் தெரியாதா ? சொல்ல வேனுமா ? ஒரு வருஷ மாய்த்தான் என்னுடைய மாமன் பக்கவாயு வந்து படுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/23&oldid=1395639" இலிருந்து மீள்விக்கப்பட்டது