உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


படுக்கையாய்க் கிடக்கிருரே: மாமி ஒன்றும் அவரைச் சரியாய்த் கவனிக்கிறதில்லை. நான்தான் எப்போதும் அவர் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் அக்கம்பக்கம் போளுல் கூட மாமன் கூப்பிட்டுவிடுகிருர், எப்படி வெளியே வருகிறது? : 'நிஜந்தான். ஆணுல் இரண்டொரு தடவை என்னைப் பார்த்தபோதுகூடப் பாராததுபோல் போய்விட்டாயே, அது ஏன் ? என்ருன் கிருஷ்ணன். வெட்கத்துடன் கூடிய புன்னகை அவள் முகத்தில் ஒரு கணம் தோன்றியது. 'நாம் இன்னும் சின்னப் பிள்ளைகளா, என்ன ? ஆண் பிள்ளைகளுடன் பேசக் கூடாதென்று மாமி ஒரு நாள் கண்டித்தாள். அவள் சொல்கிறதும் நியாயந்தானே ? யாராவது ஏதாவது சொல்ல மாட்டார்களா ?” என்ருள். இப்போது கிருஷ்ணன் உள்ளத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. இன்றைய தினம் பூங்கொடி எதற்காக இக்காட்டுக்கு வந்தாள் ? - இந்தக் கேள்வி முன்னமே தனக்குத் தோன்ருதது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. ஒரு கணம், ஒரு வேளை நம்மைப் பார்க்கத்தான் வந்திருப்பாளோ?’ என்று எண்ணினன். அந்த எண்ணமே அவன் உடம்பை ஒர் அங்குலம் பூரிக்கச் செய்தது. உடனே அப்படி இருக்க முடியாதென்று தெரிந்தது. தான் காட்டில் மயிலைக் காளையைத் தேடுவது அவளுக்குத் தெரிந் திருக்க இடமில்லை. மேலும், தன்னைப் பார்த்ததும் அப்படித் திடுக்கிட்டு நின்ருளே ? ஏதோ மர்மம் இருக்க வேண்டும். "ஆமாம், இன்று எதற்காகக் காட்டுக்கு வந்தாய்? என்று கேட்டான். “அதைச் சொல்லக் கூடாது' என்று கூறி, பூங்கொடி பக்கத்திலிருந்த புதரிலிருந்து இலைகளைக் கிள்ளிப் போடத்தொடங் கினுள். கிருஷ்ணனுடைய மனத்தில் இப்போது பயங்கரமான ஒரு சந்தேகம் உண்டாயிற்று. வேறு யாரேனும் ஒர் ஆண்பிள்ளையைச் சந்திப்பதற்காக ஒரு வேளை வந்திருப்பாளோ ? கண்ணுல் கண்டி ராத - வாஸ்தவத்தில் இல்லாத - ஒரு மனிதனின் பேரில் கிருஷ்ணனுக்கு அளவிலாத அசூயை உண்டாயிற்று; சொல்ல முடியாத கோபம் வந்தது. பூங்கொடி சற்று நேரம் தரையில் கால் கட்டை விரலால் கோடு கிழித்துக்கொண்டு நின்ருள். பிறகு நிமிர்ந்து பார்த்துக் கவலை கொண்ட முகத்துடன் கூறினுள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/24&oldid=1395640" இலிருந்து மீள்விக்கப்பட்டது