பக்கம்:பிள்ளைக்கலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&空 நான் ஒன்று சொல்கிறேன், கேள்; நான் தப்புக் காரியம் எதுவும் செய்யவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். தப்பு ஒன்றும் நடக்கவில்லை. ஆனல், நான் இன்று இந்தக் காட்டுக்கு வந்தது ஒருவருக்கும் .ெ த ரி ய க் கூ டா து. ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பாயா ?” ஒருவரிடமும் நான் சொல்லவில்லை. ஆனால், எதற்காக வந்தாய் என்று என்னிடம் மட்டும் சொல்லிவிடு' என்ருன் கிருஷ்ணன். 'அதுவும் இப்போது சொல்வ முடியாது. சமயம் வரும் போது நானே சொல்லுகிறேன். அது வரையில் நீ என்னைக் கேட்கக் கூடாது. இது ஒரு முக்கியமான காரியம். என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா ? நான் தப்பான காரியம் செய்வே னென்று உனக்குத் தோன்றுகிறதா ?” - இப்படிச் சற்று நேரம் வாக்குவாதம் நடந்தது. கடைசியில் பெண்மைதான் வெற்றி பெற்றது. - 'இதோ பார், பூங்கொடி! உன்னை நான் நம்புகிறேன். ஆல்ை, எனக்குத் துரோகம் செய்தாயென்று மட்டும் எப்போ தாவது தெரிந்ததோ, அப்புறம் என்ன செய்வேனென்று தெரி யாது' என்ருன் கிருஷ்ணன். '"துரோகமா ? அப்படியென்ருல் என்ன?’ என்ருள் பூங் கொடி. இருவரும் இராஜன் வாய்க்கால் வரையில் சேர்ந்து போளுர் கள். அங்கே கிருஷ்ணன் பின் தங்கினன். பூங்கொடி போய்க் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வீடு சென்ருன். வீட்டுக் கொல்லை யிலே மயிலைக் காளை சாவதானமாய் அசைபோட்டுக் கொண்டு நின்றது. வேறு சமயமாயிருந்தால், கிருஷ்ணன் அதை நாலு அடி அடித்திருப்டான். மகத்துக்கு ஓமாம்புலியூர் போக முடியாமல் செய்து விட்டதல்லவா? ஆஞல், அச்சமயம் அவன் உள்ளம் மிகவும் குதுனகலம் அடைந்திருந்தது. எனவே, மயிலைக் காளையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அதன் கன்னங்களைத் தடவிக்கொடுத் தான. பெருமாள் கோளுரை நேயர்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன். ஏனெனில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/25&oldid=1395641" இலிருந்து மீள்விக்கப்பட்டது