பக்கம்:பிள்ளைக்கலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


விருந்த களஞ்சியத்தண்டை சென்ருள். அதன் ஒர் ஒரத்தில் பெயர்த்திருந்த இரண்டு கல்லேப் பிடுங்கி அகற்றினள். அவ்வாறு ஏற்பட்ட துவாரத்தில் கையை விட்டாள். அச்சமயம் அவளுடைய முகத்தைப் பார்த்தவர்களுக்கு ஆட்டுப்பட்டிக்குள் நுழையும் நரியின் முகம் ஞாபகத்துக்கு வந்திருக்கக் க்டும். ஆனல் அடுத்த நிமிஷம் அந்த முகத்திலேயே ஏமாற்றமும் திகிலும் கலந்து காணப்பட்டன. மறுபடியும் மறுபடியும் கையை விட்டுத் துழாவிள்ை. கந்தல் துணி ஒன்றுதான் அகப்பட்டது. அந்தப் பணம் எங்கே போயிருக்கும் ? பத்து நாளைக்கு முன் நரசிம்மலு நாயக்கர் வந்திருந்தார். கோளுர் பெட்டியிலிருந்து அவருடைய பிராமிஸ்ரி நோட்டை எடுத்துவரும்படி சொல்லவே, பிடாரி கொண்டுபோய்க் கொடுத் தாள். நாயக்கர் அதை வாங்கிக் கொண்டு ரூ. 150 நோட்டு களாக எண்ணி வைத்தார். கோளுர் அதை வாங்கி ஒரு கடுதாசி யில் சுற்றித் தலையணைக்குள் செருகி வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பிடாரி அவரிடம் வந்து, "பணத்தைப் பெட்டியில் வைக்கட்டுமா ?’ என்று கேட்டபோது, 'சீ' போ! உன் காரியத்தைப் பார்!’ என்று எரிந்து விழுந்தார். அன்றிரவு பிடாரி சமையலறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்தாள். தூங்குவதுபோல் பாசாங்கு செய்தாளே யொழியக் கண்கொட்டவே யில்லை. இரவு ஜாமத்துக்குக் கோளுர், படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த் தார். எல்லோரும் தூங்குகிருர்களா என்று பார்த்துவிட்டுத் தலையணைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண் டார். பிறகு மெள்ளமெள்ள நகர்ந்து சென்று களஞ்சியத்தை அடைந்தார். அந்தக் கல்லுகளைப் பெயர்த்தெடுத்த பின்னர் உள்ளே கையை விட்டு ஒரு சின்னஞ்சிறு தகரப் பெட்டியை எடுத்தார். அதற்குள் நோட்டுகளே வைத்த பிற்கு மறுபடியும் முன்போல் அதைத் துவாரத்துக்குள் வைத்து மூடிவிட்டுத் திரும்பப் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார். இவ்வாறு கோனர் ரொக்கம் வைத்திருந்த இடத்தைப் பிடாரி கண்டுகொண்டாள். கோளுர் இருக்கும் வரை அதை எடுப்பதற்கு வழியில்லை. சீக்காளி மனிதன், களஞ்சியத்துக்கு எதிரில்ேயே படுத்திருந்தார். நன்ருய்த் தூங்குவதும் கிடையாது. ஆளுலும் பணம் எங்கே போய்விடப் போகிறதென்று பிடாரி தைரியமாயிருந்தாள். அவர் இறந்த பிறகு பிடாரி வீட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/27&oldid=1395643" இலிருந்து மீள்விக்கப்பட்டது