பக்கம்:பிள்ளைக்கலி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


கிருஷ்ணன் சிறிது நேரம் சும்மா இருந்தான். பிறகு, 'சரி, வா போகலாம்!' என்ருன். "எங்கே?" 'வீட்டுக்கு.' எந்த வீட்டுக்கு ?’’ 'எந்த வீட்டுக்கா? என் வீட்டுக்குத்தான். சிர்காழிக்கு நீ போகவும் வேண்டாம்! மில்லில் வேலை செய்யவும் வேண்டாம். நானிருக்கிற வரையில் அது நடக்காது.” 'உன் ,வீட்டுக்கு வந்தால். . . . அப்புறம் ?” "புரோகிதரைக் கூப்பிட்டுக் கலியாணத்துக்கு நாள் வைக்கச் சொல்றது ?’’ 'திருடியைக் கட்டிக் கொண்டாய் என்று ஊரிலே சொல்ல மாட்டார்களா ? உனக்கு வெட்கமாயிராதா ?” 'யாராவது உன்னை அப்படிச் சொன்னல் அவர்கள் நாக்கை அறுத்துவிடுவேன். அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக் கிறது 2 ” o 'உன் ஆயா சம்மதிப்பாளா? அங்கே போய் மறுபடியும் வீட்டை விட்டுப் போகச் சொன்னுல் ? . 'ஆயா அப்படிச் சொன்னல் உன்னேடு நானும் வீட்டை விட்டுக் கிளம்பி வந்துவிடுகிறேன். அப்பொழுது இரண்டுபேரு மாய்ப் போவோம்.’’ 'சத்தியமாய்ச் சொன்னல்தான் வருவேன்.' 'சத்தியமாய்ச் சொல்றேன், வா. போகலாம்!" சுபதின சுபலக்னத்தில் கிருஷ்ணக் கோனனுக்கும் பூங்கொடிக்கும் விவாக மகோற்சவம் நடந்தேறியது. பூரீமதி பிடாரி அம்மாளைத் தவிர மற்றப்படி ஊராரெல்லாரும் விஜயம் செய்து தம்பதிகளே ஆசிர்வதித்தார்கள். இவ்வளவு நல்ல பெண் னின் பேரில் திருட்டுப் பழியைச் சுமத்தி வீட்டை விட்டுத் துரத்திய பிடாரியைத் துாற்ருதவர்கள் இல்லை. அவ்வாறே கிருஷ்ணனைப் புகழ்ந்து போற்ருதவர்களும் அந்த ஊரில் கிடை யாது. எல்லாரிலும் அதிக குதுரகலத்துடன் விளங்கியவள் கிருஷ் ணனுடைய தாயார் அமிர்தம்தான். தனக்குப் பேச்சுத் துணைக்