பக்கம்:பிள்ளைக்கலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


கும், ஏவின வேலே செய்வதற்கும் மருமகள் ஆச்சு ; பிள்ளைக்கும் புத்தி தெளிந்து முன்னேப்போல் நன்ருயிருப்பான். கலியாணச் சந்தடி அடங்கிய அடியோடு ஒரு நாள் காலேயில் பூங்கொடி கிருஷ்ணனிடம், "காட்டுக்குப் போய்விட்டு வரலாம். வா!' என்று சொன்னுள். 'இப்போது எதற்குக் காட்டுக்கு ?" 'ஒரு காரியம் இருக்கிறது. நீ ஒன்றும் என்னைக் கேட் காதே, நாளுகச் சொல்லுகிறேன்' என்று அப்போது சொல்ல வில்லையா? அந்தச் சமாசாரத்தை இன்று தெரிவிக்கிறேன். வா!' கிருஷ்ணனுக்கு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலாயிருந்தது; ஆனால் காரியம் என்னவோ சுத்தமாய்ப் பிடிக்க வில்லே. வேண்டா வெறுப்பாய் வருவதாக ஒத்துக்கொண்டான். பூங்கொடி இராஜன் வாய்க்காலில் குளிக்கச் செல்வதுபோல் முதலில் போனுள், கிருஷ்ணன் பின்னேடு மாடுகளை ஒட்டிக் கொண்டு சென்ருன். - அக்கரை சேர்ந்ததும் பூங்கொடி துள்ளிக் குதித்துக்கொண்டு ஒடத் தொடங்கிள்ை. மெதுவாகத் தயக்கத்துடன் நடந்த கிருஷ்ணனைச் சில சமயம் கையைப் பிடித்து இழுத்துச் சென்ருள். கிருஷ்ணனுடைய நெஞ்சு மேலும் மேலும் படபடவென்று அடித்துக் கொண்டது. கடைசியாக ஓர் ஆலமரத்தடியில் போய்ச் சேர்ந்ததும், பூங்கொடி கிருஷ்ணன் கையை விட்டுவிட்டு அந்த மரத்தின்மேல் தாவி ஏறினுள். இரண்டு கிளைகளுக்கு மத்தியில் புல்லுருவிகளால் மூடப்பட்டிருந்த ஒரு பொத்தினுள் கையை விட்டு, அதற்குள்ளிருந்து ஒரு சிறு தகரப் பெட்டியை எடுத்தாள். 'இந்தா!' என்று கிருஷ்ணனிடம் நீட்டினள். 'என்ன அது ??? 'வாங்கிப் பாரேன்’’. கிருஷ்ணன் வாங்கிப் பெட்டியைத் திறந்து பார்த்தான். உள்ளே ரூபாய் நோட்டுகளும் பவுன்களும் இருந்தன. 'கடைசியில் இவள் திருடிதான?' என்று கிருஷ்ணன் எண் னினன். அந்த நினைப்பை அவளுல் சகிக்கவே முடியவில்லை. அதிலும், பிடாரி சொன்னதும் நிஜம்: அவள் இவளை வீட்டை விட்டுத் துரத்தியது நியாயம் என்று எண்ணியபோது அவ னுடைய தலையை யாரோ பிளப்பது போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/33&oldid=1395649" இலிருந்து மீள்விக்கப்பட்டது