器9 நிகழ்ச்சிகள் ஒன்றனதுபோல இந்த மனஉணர்ச்சிகளும் ஒன்ருகி விட்டன. சகலமும் ஏகமாகி நின்ற இந்த விசித்திரமான பருவத்திலும் கூட மிதிலையிலும் அயோத்தியிலும் சிறு பிராயத்தில் ஊசலாடியும் கிளி வளர்த்தும், நிலா முற்றத்தில் அமர்ந்து யாழிசையை அனுபவித்தும் வந்த் பழைய விளையாட்டுகளை அவர்கள் நிறுத்த வில்லை. அந்த நாளும், இந்த நாளும் ஒரே ஒரு வேற்றுமை புடன் தான் வேறுபட்டு நின்றன. முன்னளில் விளையாட்டு இன்ப வேட்கையில் பிறந்தது; விளையாட்டைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. இன்ருே விளையாட்டில் மற்ருெரு விளையாட்டுப் பிறந்தது. விளையாடவேண்டும் என்பது ஆசையாக இல்லாமல் வேருெரு விளையாட்டாகவே இருந்தது. இந்த இரண்டாவது விளையாட்டில் அவர்கள் சுவர்க்கானு பவத்தைக் கண்டார்கள்; விளையாடினர்கள். சீதை யானையின் நடையைக் கண்டு புதியதோர் முறுவல் செய்தாள்; ராமனும் அன்னத்தின் நடையைக் கண்பார்த்துப் புன்னகை பூத்தான். முன்பு குகனுடைய வாசஸ்தலத்தில் புல்லின்மேல் படுத்திருந்தது போல, இன்றும் புல்லின்மேல் படுத்துறங்கினர். முன்போலவே இன்றும் ராமனைப்பார்த்து, 'புருஷ ரூபம் கொண்ட பெண்' என்று கேலி செய்தாள் சீதை. - ஆனல்...... இப்படிப்பட்ட ஒரு தனி விசேஷம் நிறைந்த பிராயத்திலும், தனி விசேஷம் நிறைந்த மனப்பக்குவத்திலும், அவ்வப்போது சில சலனங்கள் ஏற்படாமல் இல்லை. பழைய நினைவுகள் ஒரு நினைவாகிவிட்டாலும், சில விஷயங்கள் அவற்றை இவர்கள் மனக்கண் முன் பாகுபடுத்தித் தனியாக்கிக் காட்டின. "சபரியின் பாக்கியம் எவ்வளவு என்று நான் வர்ணிப்பேன்" என்று தொடங்கும் இசைப்பாட்டு செவியில் விழுந்தால், இருவருக்கும் மேனி புளகிக்கும்; ஊமைகளைப் போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் உட்கார்ந்து விடுவார்கள். பழைய நினைவுகள் யாவும் கைகோத்துக்கொண்டு வலம்வரும். ராமனின் கண்களில் கண்ணிர் பொங்கும்; அதைக் கண்டதும் திடீரென்று சீதை கலகல என்று சிரித்துவிடுவாள். ராமனும் சிரிப்பான். இருவரும் அவ்விடத்திலிருந்து எழுந்து வேறிடத்தில் போய் உட்காருவார்கள். - . . "சபரியைப் பற்றிச் சொல்லியிருக்கி கிறதா?’ என்று சிரித்துக்கொண்டே ே
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/37
Appearance