உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o: * சீதை பதில் சொல்ல மாட்டாள். அப்பொழுது அவளுடைய கண்களில் கண்ணிர் பொங்கும்; கண்ணிரே பதில் சொல்லும். ராமன் மெளனத்தில் ஆழ்ந்துவிடுவான். இந்த அயோத்தியின் பக்கத்திலுள்ள காட்டாறுதான் இப்போது சரயு. இவர்கள் வாசம் செய்யும் மாளிகை, ரகு வம்சத்தின் குலக்கொடி கொழுந்தோடிப் படருகிற அரண்மனை யாகிவிட்டது. அக்கம்பக்கத்தில் வசிக்கும் வயதில் பெரியவர். களோ தசரதனாகவும், கோசலையாகவும் தென்படுகிருர்கள். ஒடக் காரர்கள் எல்லோருமே குகனின் திருவுருவங்கள்; குழந்தைக ளெல்லாம் லவ-குசர்கள். வாலிபர்களோ உடன்பிறந்த பரத லக்ஷ்மணர்கள். இங்கே இருக்கிருன் ராமன், இங்கே வீற்றிருக் கிருள் ஜானகி. - இரவு நேரம்; நிலா புறப்பட்டுவிட்டது. மாளிகையின் பின் புறத்திலே, ஆம்பல் இதழ் அவிழ்த்த தடாகத்தின் ஒரத்திலே ஒரு பொன்னுரசல், மலர்மாலைகளால் சுற்றப்பட்ட பொற்கயிறுகளில் இணைத்த பலகை, நவரத்தினங்கள் இழைத்த ஸ்வர்ண பீடமாகத் திகழ்கிறது. அசைவது தெரியாமல் அசைந்து ஆடும் அந்தப் பொன்னுரசலில், இந்த யுகம் கண்ட தம்பதிகள் ஆடிக் களிக் கிரு.ர்கள். எங்கிருந்தோ ஒரு இன்னிசை கேட்கிறது. இரண்டுபேர் பாடுகிரு.ர்கள். ஒன்று ஆண் குரல் மற்முென்று பெண்குரல், இரண்டும் தம்புராவின் சுருதி ஒலியில் இழைகின்றன; மூன்று ஒலிகளும் ஒன்ருகின்றன. மூவிழைகளால் திரித்த மங்கல நாண் போல இருக்கிறது இசை பாடுகின்ற குரல்கள் மட்டுமா ஒன்று போல இருக்கின்றன? பாடுகின்றவர்களின் உள்ளங்கள், பாடு கின்றவர்களின் அபிலாஷைகள், பாடுகின்ற உள்ளங்கள், பாடு கின்றவர்களின் சகலமுமே ஒன்று போலத்தான் இருக்கின்றன. பொன்னூசல் அசைவின்றி நிற்கிறது. இன்னிசையின் நடுவே மதுரம் ஊறிப் பருத்த சொற்கள் தவழுகின்றன; சுருட்டி ராகம் சொற்களே உச்சிமுகர்ந்து தழுவுகிறது: . . . பதிகி ஹார திரே - nதோ - பதிகி ஹார திரே - nதா (பதிகி) (சீதையின் நாயகனுக்கு ஆரத்தி எடுங்கள்) பாட்டும் இசையும் பொருந்தியது. இந்தத் தம்பதிகளின் ஐக்கியத் துக்கு. ஏற்ற உவமையாக் விளங்குகிறது. பாட்டு தொடருகிறது: மிகவும் மிருதுவான, உண்மையான மொழிகளைப் பேசு கிறவனுக்கு (அந்த சர்வலோக நாயகனுக்கு ஆரத்தி எடுங்கள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/38&oldid=1395654" இலிருந்து மீள்விக்கப்பட்டது