41
ஒன்றும் தோன்ருமல் நன்முக இருக்கிறது' என்று மட்டும் சொல்லுகிருள் சீதை.
‘'எது?’ என்று அவசியமில்லாமலே கேட்கிருன் ராமன். 'எல்லாம்' என்று தன்னை மறந்த பதில் வருகிறது. பாட்டு தொடர்ந்து கேட்கிறது.
'பொன்னிறமான பாம்பனையில் வீற்றிருந்து, மின்னலைப் போலப் பிரகாசிக்கும் தன்னுடைய மனையாட்டியாகிய சீதை யுடன் பேசிக் கொண்டிருக்கிருன்; உள்ளம் பூரிக்கிருன். அவனுக்கு ஆரத்தி எடுங்கள்.'
இசை சிறிது சிறிதாக மோனத்தில் கலக்கிறது; இசை வந்த பாதையில் மெளனம் வருகிறது. பொன்னுரசல் சற்றே அசையத் தொடங்கியது.
இப்போது நீங்கள் பாம்பனையில் இல்லை’ என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சிரிக்கிருள் சீதை. அவளுடைய சொற்களில் ஒலிக்கும் பேதைமை ராமனை ஆட்கொண்டு விட்டது. சீதையால் எதுவும் பேச முடியவில்லை என்பதைக் கண்டான் ராமன். இன்பக் கடலில் ஆழ்ந்து செயலற்றுப்போன அவர்கள் வேறு ஏதேனும் காரியத்தில் ஈடுபட்டு நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்று துடித்தார்கள். அப்பொழுது அவர்களுக்குக் கைகொடுக்க வந்ததுபோல வந்தது மற்ருெரு இசைப்பாட்டு:
விடமு ஸ்ேயவே - நன்னு விட நாடகுவே (விடமு) தாம்பூலம் தரித்துக்கொள் - என்னைக் கைவிட்டு விடாதே (தாம்)
பழையபடியும் ஊசல் நின்று விட்டது.
கரகரப்பிரியா ராகத்தில் இசைக்கப்பட்ட அந்தக் கிருதியின் பொருள் விசேஷம், இருவருடைய மயக்க நிலையையும் மாற்றி விளையாட்டு உணர்ச்சியை ஊட்டிவிட்டது.
'பூமியின் புதல்வியாகிய ஜானகி, தன் கையால் கொடுத்த புனிதமான வெற்றிலைச் சுருள்கள் என்று எண்ணிக்கொண்டு, தாம்பூலம் தரித்துக்கொள்.
தேவதேவா! அரசர்களின் நன்மதிப்பைப் லக்ஷ்மணன், ரத்னங்கள் இழைத்த தாம்பூலப்