உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要等 என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனல், வந்தவன் கலைக் கோட்டு முனிவன் அல்ல. காவேரியின் கரையை ஒட்டி, காட்டு வழியாக நடந்து வருகிருன் ராமன்; அவனைப் பின்தொடர்ந்து ஜானகி நடந்து வருகிருள். அவள் சிரித்தால் முத்து உதிாகிறது; நடந்தால் அங்கே செந்நெல் விளைகிறது. இருவரும் நடந்து வரும்போது மண்ணில் விழும் தடம், பூமிதேவியின் உள்ளங்கையில் அதிர்ஷ்டரேகை ஒடுவதுபோல் இருக்கிறது. திருவையாறு rேத்திரத்தினுள் இருவரும் பிரவேசிக்கின் றனர். வரும் வழியில் தெருக்களில் பற்பல காட்சிகளைத் தானும் கண்ணுற்று, தன் அன்புக்கினியாளுக்கும் ராமன் காட்டிக் கொண்டு வருகிருன். ஒரு வீட்டில் தன் குழந்தையை ஒரு தாய் தாலாட்டுகிருள். தியாகராஜ கீர்த்தனம் ஒன்றே தாலாட்டாக அமைந்துவிட்டது. தன் அருமைக் குழந்தையை ஆசையுடன் பார்த்து,"எங்கிருந்து புறப்பட்டாயோ? எந்த ஊரோ? இப்பொழு தாவது தெரிவிப்பாய் ஐயனே? என்னும் பொருள்படும் பாட்டைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடுகிருள். சிறிது தூரம் சென்றதும் ஒரு வீட்டில் ஒரு கிழவர் தம் பேரனுக்கும் பேத்திக்கும் ஒரு கீர்த்தனத்தைக் கற்றுக் கொடுப்பது இந்த வாலிபத் தம்பதி களின் காதில் விழுகிறது. கிழவர், "யாருக்காக இந்த அவதாரம் எடுத்தாயோ? இந்த மண்ணுலகத்துக்கு உன்னை வரவழைத்த மகாராஜன் எவனே? அவனை நான் வணங்குகிறேன்' என்ற அர்த்தம் தொனிக்கும் பாடலைத் தம் தளர்ந்துபோன சாரீரத் தால் உருக்கமாகப் பாடுகிரு.ர். பாடலைக் கேட்டு வாலிபத் தம்பதிகளின் கண்கள் ஆனந்த பாஷ்பம் சொரிகின்றன. தெருவோடு வரும்போது நிகழ்ந்த சகல சம்பவங்களும் அவனையும் அவன் மனைவியையும், அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த பிரஜைகளாக்கிவிட்டன. இந்த மாறுதலே ஞாபகார்த்த மாக வைத்துக் காப்பதற்காகவோ என்னவோ, கல் தடுக்கி ராமனின் கால்விரலில் ரத்தம் வழிந்தது. அதைத் துடைத்துக் கொண்டு நடக்கிருன் ராமன். . . . இருவரும் தியாகையர் வீட்டினுள் செல்கின்றனர். அப்போது அவரும் அவர் மனைவியும் ராமனின் பூஜா விக்கிர கத்தைப் பார்த்து ஆரத்திப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின் றனர். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப்போல் இருக்கும் இந்தத் தம்பதிகள் இந்த வீட்டுக்குள் நுழையும் காட்சியைப் பார்த்த ஒரு மாட்டுக்காரப் பைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/41&oldid=1395657" இலிருந்து மீள்விக்கப்பட்டது