பக்கம்:பிள்ளைக்கலி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要4 செய்தியைத் தெரிவிக்கத் தன் வீட்டுக்கு ஒடுகிருன். தியாகையரின் சீடர்களில் ஒருவன் அப்போது அங்கே சந்தர்ப்பவசமாக வந்து இவர்களைப் பார்த்துக் கொண்டான். உடனே தெரிந்தவர்கள் வீடுகளுக்கெல்லாம்போய், ராமன் வந்துவிட்டான்' என்று பறைசாற்றுகிருன். - தியாகையரும் மனைவியும் வரவேற்புக் கீதத்தைப் பாடி ஞர்களே ஒழிய வரவேற்பதற்காக எழுந்திருக்கவில்லை. ஏனென்ருல், வாலிபத் தம்பதிகள் வந்ததையே அவர்கள் பார்க்கவில்லை. ஆளுலும், பிரகாசிக்கும் தங்கப் பீதாம்பரம் உடுத்துக்கொண்டு மெதுவாய் வருவாயடா ராமா! பசும்பொன்னல் செய்த ஆபர னங்கள் அசையும்படி வாடா என்று பாடுவதன் மூலம் அவர்கள் திரும்பத் திரும்ப ராமனை அழைத்துக் கொண்டுதான் இருந் தார்கள். இருவரும் பாடி முடித்ததும் திரும்பிப் பார்த்தபோது, திருமணம் முடிந்து, மிதிலையிலிருந்து அயோத்தி வந்திறங்கிய வதுவரர்களைப்போல, இன்னும் மஞ்சள் காப்புக்கூட அவிழ்க் காத மணமக்களைப்போல, ராமனும் சீதையும் காட்சியளித் தார்கள். தெய்வத் தம்பதிகளைப் பார்த்த மானிடத் தம்பதிகள் மெய் சிலிர்த்துப் பேச்சிழந்து, அருகில்கூடப் போகத் தோன்ருமல், நின்ற நிலையிலேயே கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணக்கம் செய்தார்கள். ராமன்தான் அவர்கள் அருகில் சென்ருன் சென்று தன் கரங்களால் அவர்களைத் தொட்டு எழுப்பிஞன். 'ராமா! என் தெய்வமே! என்னைத் தேடியா நீ வந்தாய்? உன் திருப்பாதங்கள் நோவ என்னத் தேடி நடந்து வந்தாயா? இது தகுமா? நான். உன்னைக் கால்கள் நோவ நடக்க வைத்த நான்... நான் மகாபாவி - ராமா! சர்வலோக நாயகா...” தியாகையரின் கண்களிலிருந்து அருவியே கொட்டியது. அவருடைய மனைவியின் மூடிய விழிகளிலிருந்தும் கண்ணிர்த் தாரைகள் வழிந்தன. ராமன் புன்னகை செய்துகொண்டே, "நான் சர்வலோக நாயகளுக, உலகளந்த சொரூபத்தில் வரவில்லையே! தசரத குமாரதை, இந்த மண்ணுலகத்து மாந்தருள் ஒருவகைத்தானே வந்திருக்கிறேன்?' என்று கூறுகிருன்.